அண்மைய செய்திகள்

recent
-

தேர்தல் தொடர்பில் இதுவரை 304 முறைப்பாடுகள் - 60 பேர் கைது


நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 304 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் வரையில் 304 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் கூடுதலாக 39 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 22 முறைப்பாடுகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 19 முறைப்பாடுகளும், கம்பஹா மாவட்டத்தில் 15 முறைப்பாடுகளும், நுவரெலியா, காலி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 10 முறைப்பாடுகளும், கோலை மாவட்டத்தில் 11 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் 118 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் 47 முறைப்பாடுகளும், சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் தொடர்பில் 44 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அரச சொத்துக்கள் வாகனங்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் 36 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோத கூட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டமை தொடர்பில் 29 முறைப்பாடுகளும், அரச உத்தியோகத்தர்களை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பில் 10 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய 60 பேர் கைது

தேர்தல் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வரையில் தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பிலான 46 சம்பவங்களுடன் இந்த 60 பேரும் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் விதி மீறல்கள் மற்றும் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதி தினத்தில் இடம்பெற்ற விதி மீறல்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை நாளை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளது.
தேர்தல் தொடர்பில் இதுவரை 304 முறைப்பாடுகள் - 60 பேர் கைது Reviewed by NEWMANNAR on July 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.