அண்மைய செய்திகள்

recent
-

த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்களின் விபரம்- வேட்பாளர் நியமனம் தொடர்பில் மாவைக்கு இளைஞரணி கடிதம்


யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களின் விபரம் வெளிவந்துள்ளது.
தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ,ஈ.சரவணபவன், சிறீதரன், அச்சுவேலியினை சேர்ந்த இராசேந்திரா ஆகியோர் தமிழரசுக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

அதேவேளை, சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர் எல் எப்) , சிறிகாந்தா (ரெலோ), சித்தார்த்தன் (புளொட்) ஆகியோரின் இடங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தென்மராட்சியில் அருந்தவபாலனா அல்லது ரவிராஜின் மனைவியாவென கேள்வி வலுத்துள்ளது.

இதனிடையே போனஸ் ஆசனங்களுக்காக தேசியப்பட்டியலில் பரிந்துரை செய்யப்படும் பெயர்களுக்கு மிகுந்த போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு நிலை பேராசிரியரும் பேரவை உறுப்பினரும் தமிழரசுகட்சியின் உபதலைவருமான பேரா.சிற்றம்பலம் அவர்களுக்கு தேசியப்பட்டிலில் இடமளிக்குமாறு மாவை சேனாதிராஜாவை கோரும் கையெழுத்து வேட்டை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதேவேளை, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞரணியினர் வேட்பாளர் நியமனம் தொடர்பாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில், அற்புதராஜாவை வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்களின் விபரம்- வேட்பாளர் நியமனம் தொடர்பில் மாவைக்கு இளைஞரணி கடிதம் Reviewed by NEWMANNAR on July 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.