உடுவிலில் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான முதலாவது பிரசாரக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் எதிர்வரும் 25ஆம் திகதி உடுவிலில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை. சேனாதிராஜா தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்கவுள்ளது.
இரண்டு வார காலத்தினுள் தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட வடகிழக்கு வாழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளை உள்ளடக்கி எமது தேர்தல் விஞ்ஞாபனமானது வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 17ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் திறக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் முதலாவது பிரசாரக் கூட்டம் 25ஆம் திகதி சனிக்கிழமை உடுவிலில் நடைபெறவுள்ளது.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல்களை மேற்-கொண்டு பிரசார செயற்பாடுகளை முன்னெ-டுக்க-வுள்ளது. தமிழ் மக்கள் இந்தத் தேர்தலிலும் தமது ஆணையை எமக்கே அளிப்பார்கள் என்ற பெரும் நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.
உடுவிலில் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டம்
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
July 15, 2015
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
July 15, 2015
 
        Rating: 


No comments:
Post a Comment