வாக்குகள் சிதறாமல் மக்கள் ஒருமித்து வாக்களிக்க வேண்டும்: பாஸ்கரா
தேர்தலில் வாக்குகள் சிதறாமல் மக்கள் ஒருமித்து வாக்களிக்க வேண்டுமென கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் வீடமைப்பு நிலையியல்துறை தலைவருமான சி.பாஸ்கரா தெரிவித்துள்ளார்.
கரவத்ததை மட்டக்குளியவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு, மலையக, மேலக சிறுபான்மை மக்கள் முக்கிய காலகட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்கவேண்டிய நேரமிது.
நாம் பாதிக்கப்பட்ட அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வெளியில் இருந்து குரல் கொடுப்பதற்கு மேலாக ஆளும் கட்சியுடன் பங்காளியாக சேர்ந்து இந்த தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டி இடுகின்றோம்.
நாம் ஆளும் கட்சியில் பலமுள்ளவர்களாக இருந்தால் தான் அரசுக்குள் இருந்தும் குரல் கொடுக்கமுடியும்.
அக்குரலின் மூலம் தான் எமது மக்களின் உரிமைகளும் மக்களின் தேவைகளும் நிலை நாட்டக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
வரலாற்றுக் காலத்தில் இக்காலம் மிகவும் முக்கியமான காலம் ஆகும். இக்காலத்தில் எமது ஜனநாயக மக்கள் முண்ணனி வேட்பாளர்களின் வெற்றி மிக முக்கியமானதும் காலத்தின் தேவையுமாகும்.
இக் காலத்தில் வாக்கு சிதறாமல் எமது வெற்றியை மக்கள் பெருவெற்றியாக மாற்றவேண்டும்.
உரிமைப் போராட்ட வரலாற்றிலும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்கான உரிமைப் போராட்டத்திலும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் குரல் கொடுப்பதற்கும் அகிம்சைப் போராட்டம் நடத்துவதற்கும் என்றும் எமது கட்சி பின் நின்றது இல்லை என்பது மக்களுக்கு தெரிந்த வரலாறு என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாக்குகள் சிதறாமல் மக்கள் ஒருமித்து வாக்களிக்க வேண்டும்: பாஸ்கரா
Reviewed by Author
on
July 22, 2015
Rating:

No comments:
Post a Comment