மன்னார் பேரின்பதாசனின் கவிதை நூல் வெளியீடு
மன்னார் கல்வித் திணைக்களத்தில் பணிபுரிந்த முன்னாள் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. க. பேரின்பதாசன் அவர்களின் ‘நந்தவனச் சுகந்தம்’ என்ற கவிதை நூல் வெளியீடு ஞாயிறு (12.07.2015) காலை 10.00 மணிக்கு மன்னார் நகரமண்டபத்தில் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக மன்னார் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ விருந்தினர்களாக மன்னார் ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. எம். ஏ. றெவல், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம். சியான், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றன், மாகாண கல்வி பண்பாட்டுத்துறை அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன், மடு ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஜி. ஜேக்கப், ஓய்வுநிலை கணக்காளர் திரு. ஏ. ஆபிரகாம் சோசை, மன்னார் முன்னாள் நகரபிதா திரு. எஸ். ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவிற்கான வரவேற்புரையை மன்னார் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. பு. மணிசேகரன் வழங்கினார். இக்கவிதை நூலுக்கான நயவுரையை ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாபூசணம் அ. அந்தோனிமுத்து வழங்கினார்.
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக வந்துள்ள இக்கவிதை நூலின் பாடுபொருள் பன்முகப்பட்டதாக உள்ளது. நூலாசிரியர் திரு. பேரின்பதாசன் அவர்கள் பல காலமாக பல்வேறு பத்திரிகைகளில் எழுதி வெளிவந்த கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவிந்துள்ளது.
மன்னார் பேரின்பதாசனின் கவிதை நூல் வெளியீடு
Reviewed by Admin
on
July 15, 2015
Rating:
Reviewed by Admin
on
July 15, 2015
Rating:









No comments:
Post a Comment