உலகின் மிகவும் விலையுயர்ந்த பொம்மை வீடு...
8.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உலகின் விலையுயர்ந்த பொம்மை வீடு முதல் தடவையாக காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
அமெரிக்க கொலராடோ மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் கலைஞரான எலெயின் டியஹ்ல் என்பவரால் 29 அறைகளைக் கொண்ட மேற்படி பொம்மை வீடு உருவாக்கப்பட்டுள்ளது.
அவர் இந்த பொம்மை வீட்டை உருவாக்க 13 வருடங்களை செலவிட்டுள்ளார்.அத்துடன் அவர் பல தச்சு வேலை செய்பவர்கள், கண்ணாடி சிற்பக் கலைஞர்கள், வெள்ளி பொருட்களை செதுக்குபவர்கள் ஆகியோரின் உதவியுடன் மேற்படி பொம்மை வீட்டிற்கு தேவையான சின்னஞ்சிறு தளபாடங்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை வடிவமைத்துள்ளார்.
அத்துடன் இந்த பொம்மை வீட்டிற்காக 7,000 அமெரிக்க டொலர் பெறுமதியான சிறிய பியானோ வாத்தியக் கருவி, 5,000 அமெரிக்க டொலர் பெறுமதியான தளபாடங்கள், 3,000 அமெரிக்க டொலர் மற்றும் 1,840 அமெரிக்க டொலர் பெறுமதியான உருவப்படங்கள் என்பனவும் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உலகின் மிகவும் விலையுயர்ந்த பொம்மை வீடு...
Reviewed by Author
on
August 24, 2015
Rating:

No comments:
Post a Comment