அண்மைய செய்திகள்

recent
-

மக்களின் மீள்குடியேற்றத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் தூதுவர் இணக்கம் : ஜனாதிபதி மைத்திரி...


எனது புதிய அர­சாங்­கத்தில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் வராமல் இருக்கக் கூடிய வகையில் தான் நாங்கள் செயற்­பட்டு வரு­கின்றோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன்தினம் சம்­பூரில் நடை­பெற்ற மக்­க­ளுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போது தெரி­வித்தார்.


அவர் மேலும் கூறு­கையில், அன்பு, கருணை, இரக்கம் இவை­களை யுத்தம் இல்­லாமல் செய்து வரு­கி­றது. யுத்தம் எந்த நாட்­டுக்கும் எந்த மக்­க­ளுக்கும் பொருத்­த­மா­ன­தல்ல. உங்­க­ளுக்கு இருந்த உங்­க­ளது காணி­களை மீண்டும் வழங்­கு­வ­தற்­காகத் தான் இந்த பிர­தே­சத்­துக்கு வந்­துள்ளோம்.இந்த நாட்டில் வாழு­கின்ற சிங்­கள, தமிழ், முஸ்லிம், மலேயர், பறங்­கியர் எல்­லோரும் இந்த நாட்­டிலே நன்­றாக வாழ வேண்டும். எல்­லோரும் சந்­தோ­ஷ­மாக வாழக் கூடிய சமூக அமைப்பு இருக்க வேண்டும்.

உங்கள் பிள்­ளை­க­ளுக்கு சிறந்த கல்வி வச­தி­களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். நல்ல முறை­யி­லான சுகா­தார வச­தி­களை வழங்க வேண்டும். உங்­க­ளது பொரு­ளா­தார சக்தி மேம்­படுத்­தப்­பட வேண்டும். நீங்கள் தற்­கா­லி­க­மாக வாழும் வீடு­க­ளுக்கு விஜயம் செய்து பார்த்தேன். மிகவும் கஷ்­டங்­க­ளுக்கும், நஷ்­டங்­க­ளுக்கும் மத்­தி­யி­லேதான் இதில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றீர்கள் அந்த நிலைமை இல்­லாமல் செய்து அதற்­கான சீரான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

அதற்கு புதிய வேலைத்­திட்டம் ஒன்றை மேற்­கொண்­டுள்ளோம். வடக்கு கிழக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இது சம்­பந்­த­மாக எம்­மிடம் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இது சம்­பந்­த­மாக சம்­பந்தன் பல தட­வைகள் என்­னிடம் கூறி­யி­ருக்­கின்றார். அதனால் தான் இந்த பகு­தி­களை அபி­வி­ருத்தி செய்ய அமைச்சர் சுவா­மி­நா­தனை நிய­மித்­தி­ருந்தோம். இந்த நாட்டில் வடக்கு கிழக்கு என்று வித்­தி­யா­ச­மாக வாழ வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இந்த நாட்டில் வாழ க்கூடி­ய­வர்கள் அனை­வரும் இந் நாட்டு மக்­களே.

சந்­தேகம், பயம் இல்­லாமல் வாழ­வேண்டும். அப்­ப­டி­யான நல்ல சூழல் ஒன்றை எமது அர­சாங்­கத்­தினால் ஏற்­ப­டுத்தித் தருவோம். இந்த நாட்டில் வாழு­கின்ற மக்­க­ளி­டத்தில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்­கவும் பல திட்­டங்­களைக் கொண்­டு­வந்தார். 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம் புதி­ய­தொரு திருத்­தத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கின்றோம் இதன் மூலம் புதி­ய­தொரு பாதை திறந்து விடப்­பட்­டுள்­ளது.

இந்த மக்­களின் தேவை­களை நிவர்த்தி செய்யும் வகையில் வெளி­நாட்டு உத­விகள் பெறப்­பட்டு அவர்­க­ளது தேவைகள் பூர்த்தி செய்­யப்­படும். எமது நாட்­டுக்கு புதி­தாக வந்து பத­வி­யேற்ற அமெ­ரிக்க உயர்ஸ்­தா­னிகர் ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலரை மக்­களின் மீள் குடி­யேற்­றத்­துக்குத் தரு­வ­தாகக் கூறி­யுள்ளார். நாம் எல்­லோரும் இவ்­வாறு சந்­தோ­ச­மாக இருப்­ப­தற்குக் காரணம் இந்த நாட்டில் ஏற்­பட்­டுள்ள சமா­தா­ன­மாகும். இந்த சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தித் தந்த படை­வீ­ரர்­க­ளுக்கும் எனது நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கிறேன்.

ஐந்து தட­வைகள் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலில் இருந்து தப்­பி­யுள்ளேன். அந்தச் சந்­தர்ப்­பத்தில் பல உயிர்கள் பலி­யா­கின. எனவே இந்­நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்­ப­டாத வகையில் நீங்களும் நானும் சேர்ந்து செயற்பட வேண்டும் எனக் கூறினார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம், எம்.கே.டி.எஸ். குணவர்த்தன, அப்துல்லா மஹ்ரூப் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர். அஹமட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்களின் மீள்குடியேற்றத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் தூதுவர் இணக்கம் : ஜனாதிபதி மைத்திரி... Reviewed by Author on August 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.