மன்னாரில் எழுச்சியுடன் இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம்.-Photos
தமிழ் தேசியக்கூட்டமைப்பபின் வன்னி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று சனிக்கிழமை(2) மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்றது.
இக்கூட்டத்திற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராஜா கலந்து கொண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உரை நிகழ்த்தினார்.
இதன் போது வன்னி வேட்பாளர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுமான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.விநோ நோகராதலிங்கம்,சிவசக்தி ஆனந்தன் மற்றும் வேட்பாளர்களான இ.சாள்ஸ் நிமலநாதன், சிவப்பிரகாசம் சிவமோகன்,கந்தையா சிவநேசன், மாசிலாமணி றோய் ஜெயக்குமார், சாந்தி சிறீஸ்கந்தராசா. பெருமாள் செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டு அறிமுக உரையாற்றினர்.
இதனைத்தொடர்ந்து வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உரை நிகழ்த்தினர்.
குறித்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி எஸ்.பிரீமூஸ் சிறாய்வா மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்ததோடு பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் எழுச்சியுடன் இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
August 02, 2015
Rating:
No comments:
Post a Comment