அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குரான் முகமது நபிகள் காலத்தை விட பழமையானது: வெடிக்கும் புதிய சர்ச்சை...


பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குரான் உலகில் மிகவும் பழமையானது என்றும் முகமது நபிகள் காலத்துக்கு முன்பாகவே எழுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பெர்மிங்கம்(Birmingham) பகுதியில் பழமையான குரானின் படிமங்கள் கடந்த மாதம் கிடைத்தன.

இந்த படிமங்கள் விலங்குகளின் தோல்களில் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த படிமங்களின் காலத்தை கணக்கிட்ட ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வல்லுனர்கள், இது தான் உலகிலேயே பழமையாக குரான் என்று தெரிவித்துள்ளனர்.

முகமது நபிகளின் காலம் கிபி 570-632 என்றும் குரான் கிபி 610-632ஆம் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஆனால் விலங்குகளின் தோலில் எழுதப்பட்டிருந்த இந்த குரான் கிபி 568- 645 காலகட்டத்தை சேர்ந்தது என்று நம்பப்படுகிறது.

மேலும் இதில் முகமது நபிகள் பற்றிய குறிப்புகள் இருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கெயித் ஸ்மால் என்ற ஆராய்ச்சியாளர் கூறியதாவது, முன்பு இருந்த வாசகங்களையே முகமது நபிகள் மக்களுக்கு கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய குரானில் உள்ள எழுத்துகளே இதில் இடம்பெற்றுள்ளதாகவும் சில எழுத்துகள் மட்டுமே மாற்றம் அடைந்துள்ளது. ஆராய்ச்சியாளர்களின் இந்த முடிவு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குரான் முகமது நபிகள் காலத்தை விட பழமையானது: வெடிக்கும் புதிய சர்ச்சை... Reviewed by Author on September 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.