ஜெனீவா போர்க்குற்ற அறிக்கை, அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பு?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை, அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் போர்க்குற்ற விசாரணை அறிக்கை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரியான சன்ட்ரா பேடேஸினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் பதினைந்து பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசெய்ன் மற்றும் ஜெனீவாவிற்கான அமெரிக்கப் பிரதிநிதி கெயின் ஹார்பர் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது சர்வதேச தலையீட்டுடன் கூடிய உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்றின் மூலம் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற செயல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையாளர் இணங்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனீவா போர்க்குற்ற அறிக்கை, அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பு?
Reviewed by Author
on
September 02, 2015
Rating:

No comments:
Post a Comment