விசாரணை மூலம் தண்டிக்க சாசனத்தில் இடமில்லை - சுரேஷ் பிரேமச்சந்திரன்...
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உள் நாட்டுக்குள் விசாரணை நடாத்தி குற்றவாளிகளை தண்டிக்கும் சட்டம் இலங்கை அரசியல் சாசனதிலேயே இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று (02) புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்திற்கு அமைய விசாரணைகள் நடாத்தப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது அந்த அறிக்கை தற்போது வெளிவர உள்ளது.
அந்த அறிக்கை வெளிவந்த பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாகவோ அல்லது சர்வதேச தீர்ப்பாயம் எனும் பொறிமுறை ஊடகவோ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதேவேளை தற்போது சிலர் கூறுகின்றார்கள் சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டதாக அது தவறான கூற்று அவ்வாறு எந்த விசாரணையும் முடிவடைய வில்லை . விசாரணை அறிக்கை மாத்திரமே தயாராகியுள்ளது.
இதேவேளை உள்ளக விசாரணை தமிழ் மக்களுக்கு நீதியினை பெற்று தர மாட்டாது இலங்கையில் நடைபெற்ற குற்றங்கள் எனபது யுத்த குற்றம் , மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் , மனித உரிமை மீறல்கள் மற்றும் இனவழிப்பு போன்றவையாகும்.
இவ்வாறன குற்றத்தை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கூடிய சட்டம் இலங்கை அரசியல் சாசனத்திலோ சட்டத்திலையோ இடமில்லை . அதனை செய்வதற்கான சட்டத்தை இயற்ற கூடிய நிலையும் இல்லை.
இதேவேளை இந்த குற்றங்களை செய்தவர்கள் அதனால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதித்தல், சனல் 4 வெளியிடப்பட்ட காணொளி ஆதாரங்கள் பரிசோதித்தல், கொல்லப்பட்டவர்களின் புதைகுழிகளை தோண்டி எழும்புக்கூடுகளை பரிசோதித்தல் ஆகியவற்றை செய்ய கூடிய வசதிகள் இலங்கையில் இல்லை எனவே உள்ளக விசாரணை என்பது இலங்கையில் சாத்தியமற்றது.
அதேவேளை உள்ளக விசாரணை மூலம் உள் நாட்டிலே விசாரணைகள் நடாத்தப்பட்டால் சாட்சியங்களுக்கான பாதுக்காப்புக்கு உத்தரவாதம் இருக்குமா ? சாட்சியங்கள் பயம்மின்றி தமது சாட்சியங்களை கூறுமா ? என்ற கேள்விகளும் எழும்பும்.
எனவே அரசாங்கம் கூறும் உள்ளக விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பு செய்து குற்றவாளிகளை பாதுகாப்புக்கும் நடவடிக்கையாகவே இருக்கும் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போக கூடாது
தேர்தல் காலத்தில் சர்வதேச விசாரணையே வேண்டும் என என்றவர்கள் தேர்தல் முடிவடைந்த பின்னர் உள்ளக விசாரணையை ஏற்றுகொள்வது என்பது மக்கள் தந்த ஆணையை அவமதிப்பது போன்றது எனவே மக்கள் ஆணையை மதித்து சர்வதேச விசாரணையை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
விசாரணை மூலம் தண்டிக்க சாசனத்தில் இடமில்லை - சுரேஷ் பிரேமச்சந்திரன்...
Reviewed by Author
on
September 02, 2015
Rating:

No comments:
Post a Comment