கிழக்கு மாகாணசபையில் உறுப்பினர் வெற்றிடம்...
கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள் ஐவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு விரைவில் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், அம்பாறை மாவட்டத்தின் 5 பேர், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 14 கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர்.
இவர்களுள் அம்பாறையிலிருந்து மூவரும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து தலா ஒவ்வொருவருமாக மொத்தம் 5 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த 5 பேரும் தமது கிழக்குமாகாண சபை உறுப்பினர் பதவி விலகல் கடிதங்களை ஏற்கனவே மாகாணசபைப் பேரவைச் செயலாளரிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்புமாறு தேர்தல் ஆணையாளருக்கு தாம் அறிவித்துள்ளதாக கிழக்கு மாகாண சபை பேரவைச் செயலாளர் எம்.சீ.எம். செரீப் தெரிவித்தார்.
இதன்படி அந்தந்த கட்சிகளில் போட்டியிட்டு கூடிய விருப்புவாக்குகள் பெற்ற அடுத்தடுத்த உறுப்பினர்கள் இவ்வெற்றிடத்திற்கு நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணசபையில் உறுப்பினர் வெற்றிடம்...
Reviewed by Author
on
September 02, 2015
Rating:

No comments:
Post a Comment