தனிச்சிங்கள மொழியில் நன்றி தெரிவித்த தமிழ் உறுப்பினர்...
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியூடாக தெரிவாகியுள்ள கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நேற்று வியாழக்கிழமை தனது கன்னி உரையை நிகழ்த்திய போது தனக்கு வாக்களித்த மக்களுக்கு தனிச்சிங்கள மொழியில் நன்றி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றுவதற்கு வேலுகுமார் எம்.பி.க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போதே தனது கன்னி உரையை அவர் சிங்கள மொழியில் ஆற்றினார்.
20 வருடங்களுக்குப் பிறகு கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரேயொரு தமிழ்ப் பிரதிநிதி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தனக்கு ஒதுக்கப்பட்ட சொற்ப நேரத்தையும் சிங்கள மொழியில் உரையாற்றுவதற்கே பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
தனிச்சிங்கள மொழியில் நன்றி தெரிவித்த தமிழ் உறுப்பினர்...
Reviewed by Author
on
September 04, 2015
Rating:

No comments:
Post a Comment