அண்மைய செய்திகள்

recent
-

அமைச்­ச­ரவை பத­வி­யேற்பு ....



12.10 PM - பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாரும் வருகை
12.11 PM - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை
12.12 PM - தேசிய கீதம் இசைக்கப்படுகிறது
12.14 PM - இலங்கை அரசியலமைப்பை பாதுகாக்கும் பொருட்டு சத்தியப்பிரமாணம் இடம்பெறுகிறது
12.17 PM  - தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம்
12.19 PM  - சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கிறிஸ்தவ விவகார அமைச்சராக ஜோன் அமரதுங்க  சத்தியப்பிரமாணம்
12.21 PM  - வன ஜீவராசிகள் அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா சத்தியப்பிரமாணம்
12.22 PM  - போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா சத்தியப்பிரமாணம்
12.24 PM  - வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சராக எஸ்.பி. திசாநாயக்க சத்தியப்பிரமாணம்
12.25 PM  - தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சராக ஜோன் செனவிரத்ன சத்தியப்பிரமாணம்
12.27 PM  - பல்கலைக்கழக கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சராக லக்ஷ்மன் கிரியெல்ல சத்தியப்பிரமாணம்
12.28 PM  - அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக அனுரபிரியதர்ஷன யாப்பா சத்தியப்பிரமாணம்
12.30 PM  - தொழில்நுட்ப கல்வி, தொழில்வாய்ப்பு அமைச்சராக சுசில் பிரேம்ஜயந்த சத்தியப்பிரமாணம்
12.30 PM  - சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சராக திலக் ஜனக மாரப்பன சத்தியப்பிரமாணம்
12.32 PM  - சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சராக ராஜித சேனாரத்ன சத்தியப்பிரமாணம்
12.34 PM  - நிதி அமைச்சராக ரவி கருணாநயக்க சத்தியப்பிரமாணம்
12.35 PM  -  நிபுணத்துவம்,தொழிற்பயிற்சி அமைச்சராக மஹிந்த சமரசிங்க சத்தியப்பிரமாணம்
12.36 PM  -  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக வஜிர அபேவர்தன சத்தியப்பிரமாணம்
12.38 PM  -  உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி,கலாசார அமைச்சராக எஸ்.பி.நாவின்ன சத்தியப்பிரமாணம்
12.39 PM  -  மேல்மாகாண, மாநகர அபிவிருத்தி அமைச்சராக பாட்டலி சம்பிக ரணவக்க சத்தியப்பிரமாணம்
12.40 PM  -  கடற்றொழில் மற்றும் நீரியல் துறை அமைச்சராக மஹிந்த அமரவீர சத்தியப்பிரமாணம்
12.41 PM  -  பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக நவீன் திசாநாயக்க சத்தியப்பிரமாணம்
12.42 PM  -  மின்வலு அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய சத்தியப்பிரமாணம்
12.43 PM  - கமத்தொழில் அமைச்சராக துமிந்த திசாநாயக்க சத்தியப்பிரமாணம்
12.44 PM  - புத்தசாசன அமைச்சராக விஜேதாச ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம்
12.46 PM  - கிராம பொருளாதார அமைச்சராக கே. ஹரிசன் சத்தியப்பிரமாணம்
12.47 PM  - அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சராக  ரஞ்சித் மத்துமபண்டார சத்தியப்பிரமாணம்
12.49 PM  - பாராளுமன்ற மறுசீரமைப்பு வெகுஜன ஊடக அமைச்சராக கயந்த கருணாதிலக்க சத்தியப்பிரமாணம்
12.51 PM  - வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக சஜித் பிரேமதாச சத்தியப்பிரமாணம்
12.52 PM  - துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சராக அர்ஜுன ரணதுங்க சத்தியப்பிரமாணம்
12.53 PM  - காணி அமைச்சராக எம்.கே.டி.எஸ். குணவர்தன சத்தியப்பிரமாணம்
12.55 PM  - மலையக கிராம அபிவிருத்தி , உட்கட்டமைப்பு , சமூக அபிவிருத்தி அமைச்சராக பி.திகாம்பரம் சத்தியப்பிரமாணம்
12.56 PM  - மகளிர் சிறுவர் அபிவிருத்தி அமைச்சராக சந்திராணி பண்டார சத்தியப்பிரமாணம்
12.58 PM  - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக தலதா அதுகோரள சத்தியப்பிரமாணம்
12.59 PM  - கல்வி அமைச்சராக அகிலவிராஜ் காரியவசம் சத்தியப்பிரமாணம்
01.00 PM  - புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்துமத அலுவல்கள் அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் சத்தியப்பிரமாணம்
01.01 PM  - பெற்றோலியம், பெற்றோலிய வாயுத் துறை அமைச்சராக சந்திம வீரக்கொடி சத்தியப்பிரமாணம்
01.02 PM  - விளையாட்டுத்துறை அமைச்சராக தயாசிறி ஜயசேகர சத்தியப்பிரமாணம்
01.03 PM  - தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகர ரத்நாயக்க சத்தியப்பிரமாணம்
01.05 PM  - தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஹரீன் பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்
01.06 PM  - தேசிய கலந்துரையாடல்கள் துறை அமைச்சராக மனோ கணேசன் சத்தியப்பிரமாணம்
01.08 PM  - ஆரம்ப கைத்தொழில் அமைச்சராக தயா கமகே சத்தியப்பிரமாணம்
01.10 PM  - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரை:
                  "இன்று வரலாற்று சிறப்பு மிக்கதொரு நாள். 30 வருட கால யுத்தத்தின்போதும் அதன் பின்னரான 5 ஆண்டுகளிலும் எங்களிடையே இணக்கப்பாடு காணப்படவில்லை. எனினும் இன்று எங்களிடையே இணக்கப்பாடு காணப்படுகிறது."
01.16 PM  - கைத்தொழில் மற்றும் வாணிப அபிவிருத்தி  அமைச்சராக ரிஷாட் பதியுதீன் சத்தியப்பிரமாணம்
01.18 PM  - அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹாசிம் சத்தியப்பிரமாணம்
01.20 PM  - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரை:
                 " அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் தங்களுக்கு எத்தனை திணைக்களங்கள், நிறுவனங்கள் இருக்கின்றன என்பது குறித்து கதைப்பார்கள், அமைச்சுப் பதவி கிடைக்காதவர்கள் தமக்கு ஏன் கிடைக்கவில்லை என்பது குறித்து கதைப்பார்கள். அனைவரையும் திருப்திப்படுத்துவது சிரமமான காரியம் என்பது உங்களுக்குத் தெரியும்.எனினும் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் நாட்டு மக்களுக்காக இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.அமைச்சர்கள், தமது அமைச்சுகளுக்கு கீழ் இயங்கும் நிறுவனங்களின் பிரதானிகளை நியமிக்கும்போது தன்னிச்சையாக செயற்பட முடியாது. ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரால் நியமிக்கப்படும் குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே நியமனம் வழங்கப்பட வேண்டும்."
01.39 PM  - நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக ரவூப் ஹக்கீம் சத்தியப்பிரமாணம்
01.41 PM  - தபால்,தபால் சேவைகள் முஸ்லிம் விவகார அமைச்சராக மொஹமட் ஹாசிம் சத்தியப்பிரமாணம்
01.42 PM  - அமைச்சரவை சத்தியப்பிரமாண நிகழ்வு நிறைவடைந்தது.

அமைச்­ச­ரவை பத­வி­யேற்பு .... Reviewed by Author on September 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.