அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதான பாலத்தடி கடற்கரைப்பகுதியில் மலசல கூட கழிவுகள் கலப்பு-தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் பாதீப்பு.(புகைப்படம்) p

I மன்னார் பிரதான பாலத்தடி கடற்கரைப்பகுதியில் அதிகலவான மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இன்று வெள்ளிக்கிழமை(4) காலை தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் நகர்ப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் வடிகான் மன்னார் பிரதான பாலத்தடி கடற்கரைப்பகுதியை வந்தடைகின்றது.கழிவு நீர் கடற்கரையை சென்றடையும் வகையிலே குறித்த கழிவு நீர் வடிகான் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்கள்  தமது நிலையங்களில் உள்ள மலசல கூடத்தின் கழிவுகளை குறித்த கழிவு நீர் வடிகானில் கலக்க விடப்பட்டுள்ளமையினாலேயே நேற்று(3) வியாழக்கிழமை மாலை பெய்த கடும் மழையின் காரணமாக குறித்த மனிதக்கழிவுகள் வாய்க்காலினூடக சென்று மன்னார் பிரதான பாலத்தடி கடற்கரைப்பகுதியில் கலக்கப்பட்டுள்ளதாக அந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் மன்னார் பஸார் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் காணப்பட்ட மலசலக்கூடத்தின் கழிவுகளை கழிவு நீர் வாய்க்காலில் கலக்கவிடப்பட்ட போது மன்னார் நகர சபையினால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களினால் குறித்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து குறித்த நடவடிக்கை குறைவடைந்த நிலையில் காணப்பட்டது.இந்த நிலையில் மீண்டும் மலசல கூட கழிவுகள் கழிவு நீர் வாய்க்காலில் கலக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தற்போது முகம் கொடுத்துள்ளனர். மன்னார் பிரதான பாலத்தடி கடற்கரைப்பகுதி முழுவதும் குறித்த மனித கழிவுகள் சூழ்ந்து காணப்படுகின்றது.
குறிப்பாக மீனவர்களின் படகுகள் ,வலைத்தொகுதிகளையும் சூழ்ந்து மனிதக்கழிவுகள் காணப்படுகின்றது.
எனவே மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு கழிவு நீர் வாய்க்காலில் மலசல கூட கழிவுகளை கலக்க விடும் உணவகம் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என பாதீக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் பிரதான பாலத்தடி கடற்கரைப்பகுதியில் மலசல கூட கழிவுகள் கலப்பு-தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் பாதீப்பு.(புகைப்படம்) p Reviewed by Admin on September 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.