இலங்கையினை ஆக்கிரமித்துள்ள எயிட்ஸ்: 6 மாதங்களில் 170 பேர் பாதிப்பு
2015 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 170 பேர் எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 65 சதவீதமானோர் ஆண்கள் என்றும் எஞ்சிய 35 சதவீதமானோர் பெண்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த தரவுகளின் பிரகாரம் சுமார் 2,200 இற்கும் மேற்பட்ட எயிட்ஸ் நோயாளர்கள் இலங்கையில் இனம் காணப்பட்டுள்ளதாக பாலியல் ரீதியான தொற்று நோய்கள் பிரிவின் ஆலோசகர் வைத்தியர் தர்ஷாணி விஜயவிக்கிரம தெரிவித்திருந்தார்.
எயிட்ஸ் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் சரியான எண்ணிக்கை 2,173 எனவும், அதில் 73 பேர் சிறுவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் பதிவு செய்யப்படாத நோயாளர்களின் எண்ணிகையை சேர்க்கும் போது இந்த தொகை 3,000 த்தை தாண்டகூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும், தர்ஷாணி விஜயவிக்கிரம மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறாக பார்க்கின்ற பொழுது, தற்போது அதன் தாக்கம் அதிகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
October 29, 2015
Rating:
No comments:
Post a Comment