மன்னார் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பேரூந்து தரிப்பிடங்களுக்கான இடங்களை பார்வையிட்டார் பா.டெனிஸ்வரன்-Photos
வடமாகாண போக்குவரத்து அமைச்சினால் மன்னார் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை நேற்றைய தினம் அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் கடந்த ஆண்டும் சகல மாவட்டங்களுக்கும் பேரூந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு 5 மாவட்டங்களுக்கும் தேவைகள் உள்ள இடங்கள் இனங்காணப்பட்டு பேரூந்து தரிப்பிடங்கள் அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளை, மன்னார் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார் வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்.
இதன்போது தலைமன்னார் படப்பிடி கிராமம், பேசாலை காட்டாஸ்பத்திரி, நொச்சிக்குளம், அகத்திமுறிப்பு ஆகிய கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக வீதி அளவுத்திட்டங்களுக்கு அமைவாகவும் பேரூந்து தரிப்பிடம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அந்த வேளையில் அமைச்சரோடு இணைந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர், உள்ளூராட்சித் திணைக்களம் சார்பாக பிரதேச சபைகளின் செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சரியான இடங்களை தெரிவு செய்தனர்.
இதனடிப்படையில் கட்டுமானப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பேரூந்து தரிப்பிடங்களுக்கான இடங்களை பார்வையிட்டார் பா.டெனிஸ்வரன்-Photos
Reviewed by NEWMANNAR
on
October 23, 2015
Rating:

No comments:
Post a Comment