2014 / 2015 பல்கலைக்கழக கல்வியாண்டிற்கான பதிவு நடவடிக்கைகள் ஆரம்பம்
கடந்த வருடத்தில் உயர்தரப் பரீட்சையின் சித்தியடைந்து பல்கலைக்கழக பிரவேசத்தை பெற்றுக்கொண்ட மாணவர்களின் 2014 / 2015 ஆம் கல்வியாண்டிற்கான பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிடுகின்றார்.
இதுவரைக் காலமும் பல்கலைக்கழகங்களிலேயே பதிவுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
ஆயினும் இனிமேல் மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் மாத்திரமே பதிவுசெய்துகொள்ள முடியும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
ஆணைக்குழுவில் பதிவுசெய்ததன் பின்னர், பாடவிதானங்களின் அடிப்படையில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு பெயரிடப்படுவார்கள் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா மேலும் கூறினார்.
2014 / 2015 பல்கலைக்கழக கல்வியாண்டிற்கான பதிவு நடவடிக்கைகள் ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
October 23, 2015
Rating:

No comments:
Post a Comment