அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்களின் அத்து மீறிய மீன் பிடியை கண்டித்து மன்னார் மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் தபாலட்டைகள் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்-என்.எம்.ஆலம்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதை கண்டித்து குறித்த நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் வடபகுதி தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த தபால் அட்டைகள் அனுப்பும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

-இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

-இந்தியமீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த நடவடிக்கையை நிறுத்;தும் வகையில் வடமாகாண மீனவர்கள் தபால் அட்டை போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை ஜனாதிபதி,பிரதமர்,எதிர்க்கட்சித்தலைவர்,வடமாகாண முதலமைச்சர் ஆகியொருக்கு வடமாகாண தழுவிய ரீதியில் 20 ஆயிரம் தபாலட்டைகள் அனுப்புவதற்கு நாங்கள் தீர்மானித்திருந்தோம்.

அதன் ஒரு கட்டமாக மன்னார் மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் தபால் அட்டைகள் எமது மீனவர்கள் ஊடாக கையொப்பமிட்டு அனுப்பும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை(23) மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் ஊடாகவும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.குறித்த தபால் அட்டைகள் அனுப்பி வைப்பதன் ஊடாக இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றோம்.

இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைவதை தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தவறும் பட்சத்தில் குறித்த தபாலட்டை போராட்டம் வேறு வடிவில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அரசிற்கு முன்வைக்க விரும்புகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்து மீறிய மீன் பிடியை கண்டித்து மன்னார் மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் தபாலட்டைகள் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்-என்.எம்.ஆலம். Reviewed by NEWMANNAR on October 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.