தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் கைது
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று காலையில் காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் வீட்டில் வைத்து ஆசிரியரான கிருஷ்ணப்பிள்ளை (தமிழ்நாட்டு மனோகரன்-புனைப்பெயர்) மற்றும் அவரது மனைவி தயாளினி ஆகியோர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவே பிரசாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி தம்பதியான இருவரினதும் கொலை தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததன் பிரகாரம் பிரசாந்தன் வியாழக்கிழமை இரவு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தோடு தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரான பிரசாந்தனின் சொந்த சகோதரன் தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ரீ-56 ரகத் துப்பாக்கியாலேயே இந்த ஆசிரியத் தம்பதியினர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் கைது
Reviewed by NEWMANNAR
on
October 23, 2015
Rating:

No comments:
Post a Comment