ஓரின சேர்க்கையை குணபடுத்த எலக்ட்ரிக் ஷொக் சிகிச்சை அளித்த சீன வைத்தியசாலை...
ஓரின சேர்க்கையை குணபடுத்த சீனாவில் உள்ள வைத்தியசாலைகளில மின் அதிர்ச்சி (எலக்ட்ரிக் ஷொக் ) சிகிச்சை முறைமையை பயன்படுத்துவதாக செனல் 4 நிறுவனம் ஆவணப் படமொன்றை வெளியிட்டுள்ளது.
சீனா வைத்தியசாலை ஒன்றில் மருந்துகளின் மூலமாகவும் வலி மிகுந்த எலக்ட்ரிக் ஷொக் சிகிச்சை மூலமும் ஓரின சேர்க்கையை குணபடுத்தும் காட்சிகளை கொண்ட ரகசிய ஆவண படத்தை செனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வைத்தியர்களின் பரிந்துரையின் பேரில் எலக்ட்ரிக் ஷொக் சிகிச்சை மற்றும் குமட்டலை தூண்டும் மருந்துகளின் மூலமும் ஓரின சேர்க்கையை மாற்ற முடியும் அந்த ஆவணப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென் சீனாவில் உள்ள ஷின்யு பியாக்சியாங் வைத்தியசாலைக்கு எதிராக சீனா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த வைத்தியசாலை 3500யுவன் நஷ்ட ஈடு கொடுத்து உள்ளது போது தனது இணையதளத்தின் மூலம் மன்னிப்பு கோரியுள்ளது.
ஓரின சேர்க்கையை குணபடுத்த எலக்ட்ரிக் ஷொக் சிகிச்சை அளித்த சீன வைத்தியசாலை...
Reviewed by Author
on
October 14, 2015
Rating:

No comments:
Post a Comment