தலைமன்னார்--ராமேஸ்வரம் வீதிஅமைப்பு ஆய்வுகள் விரைவில் ஆரம்பம்: மத்திய அமைச்சர்
ராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான வீதித் தொடர்பு தொடர்பில் இந்திய அரசாங்கம் விரைவில் ஆய்வுப்பணிகளை ஆரம்பிக்கவுள்ளது
மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணனை கோடிட்டு இந்திய நாளிதழ் ஒன்று இந்த தகவலை இன்று மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை இந்த திட்டத்தை முன்னின்று செயற்படுத்த அது முயற்சித்து வருகிறது. எனவே அது தொடர்பில் பல்வேறு பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு ருகின்றன என்று அவர் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்துள்ளார்.
இதன்போது சேதுசமுத்திர திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மத்திய அரசாங்கம் வகைசெய்ய முயற்சிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மீனவப்பிரச்சினையை பொறுத்த வரையில் மத்திய அரசாங்கம் ராஜதந்திர முனைப்புக்களை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைமன்னார்--ராமேஸ்வரம் வீதிஅமைப்பு ஆய்வுகள் விரைவில் ஆரம்பம்: மத்திய அமைச்சர்
Reviewed by Author
on
October 25, 2015
Rating:

No comments:
Post a Comment