அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் இருவருக்கு எதிராக மன்னாரைச் சேர்ந்த இளம் தம்பதியினர் முறைப்பாட்டை மேற்கொள்ள நடவடிக்கை-Photos


சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் இருவருக்கு எதிராக மன்னாரைச் சேர்ந்த இளம் தம்பதியினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யு.என்.எச்.சி.ஆர். என அழைக்கப்படும் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட உப அலுவகலத்தில் கடமையாற்றும் இரு பணியாளர்களுக்கு எதிராகவே தாம் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக குறித்த இளம் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நகரைச் சேர்ந்த குறித்த இளம் தம்பதியினர் கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை பூநகரியில் இருந்து ஏ-32 பிரதான வீதியூடாக காலை 11.30 மணியளவில் மன்னார் நோக்கி தமது சொந்த வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தனர்.

இதன் போது இவர்களுக்கு பின்னர் வந்து கொண்டிருந்த யு.என்.எச்.சி.ஆர் சர்வதேச தொண்டு நிறுவன வானம் இவர்களை முந்திச் சென்று குறித்த வாகனத்தில் இருந்த ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் இருவர் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் சென்று குறித்த தம்பதியினருக்கு எதிராக முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.

அவ் முறைப்பாட்டில் தமக்குப்பின்னால் வந்த பட்டா ரக வாகனத்தில் ஒரு இளம் யுவதியை கடத்திச் செல்வதாக முறைப்பாடு செய்துள்ளனர் குறித்த இரு அதிகாரிகளும்.

இந்த நிலையில் முறைப்பாட்டை மேற்கொண்ட யு.என்.எச்.சி.ஆர் சர்வதேச தொண்டு நிறுவன அதிகாரிகள் தமது வாகனத்திலேயே ஆயுதம் ஏந்திய பொலிஸாரை ஏற்றிக்கொண்டு வந்து நாச்சிக்குடா சந்தியில் எம்மை இடை மறித்து விசாரணைகளை மேற்கொள்ளவும் குறித்த இரு அதிகாரிகளும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

பின் குறித்த இளம் தம்பதியினர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனித்தனியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது குறித்த இருவரும் திருமணம் முடித்த இளம் தம்பதியினர் எனவும் உறவினர்களின் வீட்டிற்குச் சென்று விட்டு மன்னாரில் உள்ள தமது விட்டிற்கு செல்கின்றமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த யு.என்.எச்.சி.ஆர் சர்வதேச தொண்டு நிறுவன அpதிகாரிகள் இருவரும் தாம் செய்த தவறான செயலுக்கு ஒரு மன்னிப்பு கூட கேட்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்று விட்டனர்.

அவ் அதிகாரிகள் மேற்கொண்ட குறித்த சம்பவம் குறித்த தம்பதியினருக்கு வேதனையையும்,கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் குறித்த தம்பதியினர் உடனடியாக கிளிநொச்சியில் உள்ள யு.என்.எச்.சி.ஆர் உப அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள தலைமை அதிகாரியை சந்தித்து முறைப்பாட்டை மேற்கொண்டனர்.

உடனடியாக இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் தாம் விசாரனைகளை மேற்கொள்ளுவதாக குறித்த அதிகாரி தெரிவித்தார்.ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையையும் குறித்த அதிகாரி மேற்கொள்ளாது தமது சக அலுவலகர்களை காப்பாற்றும் நோக்கத்தோடு அவர் செயற்படுகின்றமை உணரக்கூடியதாக உள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட எங்களிடம் குறித்த ஆண் மற்றும் பெண் ஆதிகாரிகள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும்.அத்துடன் தகுந்த நஸ்டஈடும் வழங்க வேண்டும் என்பதே குறித்த தம்பதியினரின் கோரிக்கையாக உள்ளது.

இவ்விடயம் தொடர்பில் யு.என்.எச்.சி.ஆர். சர்வதேச தொண்டு அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தவுள்ளதோடு மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டையும் செய்யவுள்ளோம்.என குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் இருவருக்கு எதிராக மன்னாரைச் சேர்ந்த இளம் தம்பதியினர் முறைப்பாட்டை மேற்கொள்ள நடவடிக்கை-Photos Reviewed by NEWMANNAR on October 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.