அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்து உண்மையான நல்லிணக்கத்தையும்,நல்லாட்சியையும் தமிழ் மக்களுக்கும் வெளிப்படுத்துங்கள்-அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் -Photo
நல்லாட்சி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறி எமது மக்களின் வாக்குப்பலத்தில் ஆட்சி அமைத்திருக்கும் தங்களின் அரசு குறைந்த பட்சம் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்து உண்மையான நல்லிணக்கத்தையும்,நல்லாட்சியையும் தமிழ் மக்களுக்கும் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளுவதாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் இன்று(14) ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
அரசியல் கைதிகளாகிய நாம் தண்டனை பெற்றும்,நீண்டகால முடிவில்லாத விசாரனைகளை எதிர் கொண்டும்,வழக்கு விசாரனைகள் எதுவும் ஆரம்பிக்கப்படாமலும் நீண்ட காலமாக குறிப்பாக 08 தொடக்கம் 24 வருடங்களாக நீதிக்குப்புறம்பான முறையில் மனிதாபிமானமற்ற சிறைவாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு நாம் உள்ளாக்கப்பட்டுள்ளோம்.
ஐயா,, கடந்த கால அரசுகள் உற்பட கௌரவ பிரதமர் மற்றும் தங்களுக்கும் எமது விடுதலை தொடர்பாக பல வேண்டுகோள்களை விடுத்துள்ள போதும் எமக்கு பல வாக்குறுதிகளை வளங்கி அவை நிறை வேற்றப்படாது தொடர்ந்தும் நாம் ஏமாற்றப்பட்டே வருகின்றோம்.
இருதியாக நடைபெற்ற பொதுத்தேர்தலின் போதும் கௌரவ பிரதமர் அவர்கள் எம்மை விடுதலை செய்வதாக வாக்குறுதி வளங்கியிருந்தும் இதுவரை அதற்கான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
மாறாக எம்மை குற்றவாளிகளாக்கி தொடர்ந்தும் எம்மைச் சிறை வைப்பதற்கான செயன் முறைகளே முன்னெடுக்கப்படுகின்றது.
-ஐயா நல்லாட்சி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறி எமது மக்களின் வாக்குப்பலத்தில் ஆட்சி அமைத்திருக்கும் தங்களின் அரசு குறைந்த பட்சம் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்து உண்மையான நல்லிணக்கத்தையும்,நல்லாட்சியையும் தமிழ் மக்களுக்கும் வெளிப்படுத்துமாறே வேண்டுகின்றோம்.
இலங்கை வரலாற்றில் பல்வேறு கால கட்டங்களில் பல ஆயுதக்குழுக்கள் சிறை வைக்கப்பட்டு 05 ஆண்டுகளுக்குள் பொது மன்னிப்பலித்து விடுதலை செய்யப்பட்டது போன்று எம்மையும் விடுதலை செய்யுமாறே நாம் வேண்டுகின்றோம்.
அரசியற்கைதிகளாகிய நாம் ஆரம்பித்திருக்கும் சாத்வீக ரீதியான இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை அரசியல் சார்ந்து அனுகாது உண்மையான மனிதாபிமான முறையில் ஆராய்ந்து எம் அனைவருக்கும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறு தங்களை வேண்டி நிற்கின்றோம்.
என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் 30 கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்து உண்மையான நல்லிணக்கத்தையும்,நல்லாட்சியையும் தமிழ் மக்களுக்கும் வெளிப்படுத்துங்கள்-அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் -Photo
Reviewed by NEWMANNAR
on
October 15, 2015
Rating:
No comments:
Post a Comment