அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அதிகளவான போதைவஸ்து எப்படி எங்கிருந்து வருகின்றது?: புத்திஜீவிகள் விசனம்


போதை பொருள் பாவனையை தடுத்து அதற்கு அடிமையானவர்களை புனர்வாழ்வு அளிக்க விரைந்து செயற்படுமாறு மன்னார் புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மன்னாரில் போதைவஸ்து மற்றும் சிறுநீரக வியாதி சம்பந்தமாகவே மக்களிடையே பல்வேறு சிக்கல் நிலவிவருகிறது என தெரிவிக்கும் மன்னார் புத்திஜீவிகள் மன்னார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் போதைவஸ்துக்ளின் பாவனை அதிகரித்து காணப்படுவதாகவும் போதைவஸ்து பெரும் அளவில் எப்படி? எங்கிருந்து? வருகின்றது என்பதில் மர்மமாகவே இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஒரு சில போதைவஸ்துக்கள் மன்னார் பகுதியில் மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட்டதையும் மன்னார் மாவட்ட சுகாதார பகுதியினர் சோதனையிட்டு தற்பொழுது இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

இருந்தும் மன்னார் மாவட்டம் இந்தியாவுக்கு மிகவும் அருகாமையில் இருப்பதால் அங்கிருந்து போதைவஸ்து பொருட்கள் பெருந்தொகையாக இங்கு மிகவும் சுலபமாக வந்து சேர்கின்றன.

கிழமையில் ஒரு முறையாவது போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாவனையாளர்கள் கைது செய்யப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் இவைகள் எப்படி? எங்கிருந்து? வருகின்றது என்பது இன்னும் கண்டு பிடிக்கப்படாத நிலையே இங்கு இருந்து வருகின்றது.

மன்னாரில் போதை குடிப்பழக்கம் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த குடிபோதையால் மன்னார் மாவட்டத்தில் குடும்பங்கள் சீரழிவு, வறுமைக் கோட்டுக்குள் பல குடும்பங்கள் உள்ளாக்கப்பட்டு அவதிப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இவற்றையெல்லாம் கவனத்துக்கு எடுத்த அருட்பணியாளர் வின்சன்ட் பற்றிக் ஓ.எம்.ஐ அடிகளார் போதைவஸ்துகளுக்கு அடிமையாகுவோருக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக மன்னார் தோட்டவெளி என்னும் பகுதியில் திருப்புமுனை என்னும் புனர்வாழ்வு மையம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்தி வந்தார்.

எனினும் குறித்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி பற்றாக்குறை காரணமாக போதைவஸ்துகளுக்கு அடிமையாகுவோருக்கு புனர்வாழ்வு அளிப்பதில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாக புத்திஜிவிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் போதைவஸ்துக்கள், குடி பாவனைகளுக்கு உள்ளாகியிருப்பவர்களை தடைசெய்ய முற்படும் அதேவேளை அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்போது அது ஓரளவுக்கு வெற்றியளிக்க ஏதுவாக அமையும்.

ஆகவே இது விடயமாக சம்பந்தபட்டவர்கள் போதைக்கு அடிமையானவர்களையும், மன்னாருக்கு பெரும் அளவில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து செல்வதையும் கட்டுப்படுத்தும் படியும் புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுகின்றனர்.
மன்னாரில் அதிகளவான போதைவஸ்து எப்படி எங்கிருந்து வருகின்றது?: புத்திஜீவிகள் விசனம் Reviewed by NEWMANNAR on October 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.