இலங்கை தொடர்பான போர்க்குற்ற யோசனைக்கு 38 நாடுகள் இணை அனுசரணை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான போர்க்குற்ற யோசனைக்கு 25 நாடுகள் அனுசரணை வழங்கியதாக முன்னர் கூறப்பட்டபோதும் அந்த வரிசையில 38 நாடுகள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதியன்று எஞ்சிய
நாடுகளும் இணை அனுசரணை பட்டியலில் தம்மை இணைந்துக்கொள்ளவுள்ளன என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.
அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, கிரீஸ், லத்தீவியா, மொன்டிக்ரோ, போலந்து, ரோமேனியா, இலங்கை, மெசடோனியா, பிரித்தானியா, வட அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளே முன்னதாக இந்த யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன.
இந்தநிலையில் எஸ்டோனியா, பிரான்ஸ், அயர்லாந்து, ஜப்பான், கொரியா, சியாரா லியோன், ஒஸ்ரியா, பொஸ்னியா, ஹேர்ஹேகோவேனியா, கனடா, சைப்பிரஸ், செக் மக்கள் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஜோர்ஜியா, ஹங்கேரி, இத்தாலி, லிச்டென்டின், லக்சம்போக், மோல்டா, நோர்வே, சுலோவேக்கியா, ஸ்பெய்ன், சுவீடன், சுவீட்ஸர்லாந்து ஆகியன புதிதாக நேற்று வெள்ளிக்கிழமை இலங்கையின் யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளன.
இலங்கை தொடர்பான போர்க்குற்ற யோசனைக்கு 38 நாடுகள் இணை அனுசரணை
Reviewed by NEWMANNAR
on
October 03, 2015
Rating:

No comments:
Post a Comment