அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க தூதுவர் கத்ரின் றசல் யாழ் ஆயர் மற்றும் முதலமைச்சரை சந்திப்பு...


சர்வதேச மகளீர் விடயங்களுக்கான அமெரிக்க தூதுவர் கத்ரின் றசல் தலமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்.ஆயர், மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோரை சந்தித்துள்ளனர்.
இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு யாழ்.வந்த தூதுவர் தலமையிலான குழுவினர் யாழ்.ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசத்தை சந்தித்து பேசியிருந்தார்.

இதன் போது வடக்கில் பெண் தலமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதார நிலமைகள் மேம்படுத்தப்பட வேண்டும். மேலும் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் மற்றும் மீள்குடியேற்றப்படவேண்டியிருக்கும் மக்கள் அவர்களுடைய நிலங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும். என்பன போன்ற கோரிக்கைகளை ஆ

தொடர்ந்து காலை 11.30 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசிய மேற்படி குழுவினர்  சுமார் 1 மணிநேரம் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது வடக்கில் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  விதவைகளான  நிலையில் அவர்களுடைய வாழ்வாதார முன்னேற்றத்திற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இ ல்லை எனவும் அந்தவகையில் போதுமான வாழ்வாதார உதவிகள் தேவை என்பதையும் முதலமைச்சர் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தொடர்ந்து இக்குழு யாழ். மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளை இரகசியமான முறையில் இரகசியமான ஒரு இடத்தில் சந்தித்து சில முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.



அமெரிக்க தூதுவர் கத்ரின் றசல் யாழ் ஆயர் மற்றும் முதலமைச்சரை சந்திப்பு... Reviewed by Author on October 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.