நல்லாட்சி ஏற்பட்டுள்ள இந்நாட்டில் உடனடியாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.வடமகாண சபை உறுப்பினர் ஞா.குணசீலன்.
நல்லாட்சி ஏற்பட்டுள்ள இந்நாட்டில் சிறைச்சாலைகளில் தொடர்ந்தும் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிளை உடன் விடுதலை செய்ய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் நிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத்தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-இன்றுடன் மூன்றாவது(3) நாட்களாக அவர்களின் உண்ணாவிரதம் தொடர்கின்றது.
-அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பும்,மனித உரிமைகள் அமைப்பும் தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கைகளை அரசிற்கு முன் வைத்து வந்தது.
குறிப்பாக யுத்தம் முடிவடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட மற்றும் அரசாங்கத்திடம் சரணடைந்த முன்னால் போராளிகள் புனரர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் விடுதலை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போன்று தமிழ் அரசியல் கைதிகளையும் அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக வழியுறுத்தி வந்தோம்.
ஆனால் இது வரை அவர்களின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் எவ்வித கருணையும் காட்டவில்லை.
தற்போது அவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக ஒட்டு மொத்த தமிழ் மக்களும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் இது வரை எமது அரசியல் கைதிகளின் நிலை குறித்து எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
-எனவே தொடர்ந்தும் காலம் தாமதிக்காது எவ்வித விசாரனைகளும்,எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
நல்லாட்சி ஏற்பட்டுள்ள இந்நாட்டில் உடனடியாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.வடமகாண சபை உறுப்பினர் ஞா.குணசீலன்.
Reviewed by NEWMANNAR
on
October 15, 2015
Rating:
No comments:
Post a Comment