அண்மைய செய்திகள்

recent
-

முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்­றத்­துக்கு முட்­டுக்­கட்டை போட வேண்டாம்....


முஸ்லிம் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கா­விட்­டாலும் பர­வா­யில்லை. அதற்கு முட்­டுக்­கட்டை போடாமல் இருந்தால் போது­மா­னதாகும் என அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.
மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ராக நான் பதவி வகித்­த­போது, தமிழ் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கினேன். ஆனால் இன்று முஸ்­லிம்கள் ஓரங்­கட்­டப்­ப­டு­கி­றார்கள் என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இலங்கை தொடர்­பான ஐ.நா. அறிக்கை மற்றும் அமெ­ரிக்க பிரே­ரணை தொடர்­பான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே, கைத்­தொழில் வர்த்­தக அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் இவ்­வாறு தெரி­வித்தார். அமைச்சர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், நாம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்லர். தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் அம்­மக்­களின் மீள் குடி­யேற்­றத்­திற்கு தடை­யாக இருக்க மாட்டோம்.
யுத்தம் முடிந்த பின்னர் இடம்­பெ­யர்ந்த தமிழ் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை அப்­போது நான் அவ்­வி­ட­யத்­திற்கு பொறுப்­பான அமைச்­ச­ராக பதவி வகித்த போது சிறந்த முறையில் மேற்­கொண்டேன். தமிழர் பகு­தி­களில் சிங்­கள மக்­க­ளையோ முஸ்லிம் மக்­க­ளையோ நான் குடி­யேற்­ற­வில்லை.
ஆனால் எனக்கு பின்னர் பலர் மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் பத­வி­களை ஏற்­றனர். ஆனால் வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களை மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­மேற்­கொள்­ள­வில்லை.
அதற்கு எதி­ராக பலர் செயற்­பட்­டனர். புத்­த­ளத்தில் குரு­நா­கரில் எமது மக்கள் இடம்­பெ­யர்ந்து வாழ்­கின்­றனர். அவர்கள் கேட்­பது தம்மை சொந்த இடங்­களில் வாழ வைக்க வேண்டும் என்­ப­துதான். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ருக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கிடைத்­த­போது முழு­மை­யான ஆத­ரவை வழங்­கினோம்.
சம்­பந்தன், மாவை சேனா­தி­ராஜா ஆகியோர் எமது மக்­களின் மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் மித­வா­தத்­தையே கடை­ப்பி­டிக்­கின்­றனர். ஆனால் கூட்­ட­மைப்பின் சிலர் இவ் விட­யத்தில் கடும் போக்கை கடைப்­பி­டிப்­பது கவ­லை­ய­ளிக்­கின்­றது.
வில்­பத்தில் முஸ்­லிம்கள் தமது சொந்தக் கிரா­மங்­க­ளி­லேயே மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டனர். ஆனால் பொது­பல சேனா போன்ற இன­வாத அமைப்­பு­களும் சில ஊட­கங்­களும் இதனை காட­ழிப்­பாக காட்­டினர்.
காடு அழிக்­கப்­பட்டு மக்கள் குடி­யேற்­றப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இது தொடர்பில் அமைச்சர் சுவா­மி­நா­தனை சந்­தித்தும் எமது மக்களின் பிரச்சினைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றும் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்காவிட்டாலும் அதற்கு தடைபோடாமல் இருந்தால் போதும் என்றும் அமைச்சர் ரிஷாத் தெரிவித்தார்.

முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்­றத்­துக்கு முட்­டுக்­கட்டை போட வேண்டாம்.... Reviewed by Author on October 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.