ஐ.நா.வின் 70 ஆண்டு தினம் இன்று...
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 70 ஆண்டு நிறைவு நினைவு தினம் மற்றும் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை இணைந்து 60 ஆண்டுகள் நிறைவு தினம் ஆகியன இன்று கொண்டாடப்படவுள்ளன.
இதன் காரணமாக கொழும்பில் விசேட நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1945ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு 10 ஆண்டுகளின் பின்னர் 1955ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி அதன் உறுப்பு நாடாக இலங்கை இணைந்து கொண்டது.
அத்துடன் கடந்த 21ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் விவகார பிரதி செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா இன்று கொழும்பில் உள்ள ஐ.நா.அலுவலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் 70 ஆண்டு தினம் இன்று...
Reviewed by Author
on
October 24, 2015
Rating:

No comments:
Post a Comment