மிரொஸ்லவ் ஜென்கா அமைச்சர் மனோ கணேசனுடன் சந்திப்பு...
தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனை, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் மிரொஸ்லவ் ஜென்கா சந்தித்து உரையாடியுள்ளார். இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கைக்கான ஐநா வதிவிட இணைப்பாளர் சுபினே நந்தி, நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் கீதா சபர்வால் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய கலந்துரையாடல் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிபார்சுகளுக்கான இலங்கையின் உள்நாட்டு பங்களிப்பு, புதிய ஆட்சியின் கீழ் இலங்கையில் தற்போதைய நல்லிணக்க செயற்பாடுகளின் முன்னேற்றம் அவற்றுக்கான சமகால தடைகள் மற்றும் தேசிய கலந்துரையாடல் அமைச்சின் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஐநா சபையின் உதவி மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மிரொஸ்லவ் ஜென்கா அமைச்சர் மனோ கணேசனுடன் சந்திப்பு...
Reviewed by Author
on
October 24, 2015
Rating:

No comments:
Post a Comment