அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மாணவர்களுக்கு MBA கற்கைநெறியை வழங்கும் DeVry பல்கலைக்கழகம்...


புத்தாக்கம்,சமத்துவம் மற்றும் சமகால கற்கை நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் கவனம்  செலுத்தியுள்ள ஒரு புதியதலைமுறை சார்ந்த கல்விநிறுவனமான Asian International Academy, இலங்கையில் MBA கல்வித் தகைமையைவழங்கும் முகமாக DeVry பல்கலைக்கழகத்தின் Keller முகாமைத்துவ பட்டப்படிப்பு கல்லூரியுடன் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

DeVry பல்கலைக்கழகமான DeVry Education Group Inc: (NYSE:DV) நிறுவனத்தின் அங்கமாகும். இது தொடர்பான அங்குரார்ப்பண வைபவம் DeVry பல்கலைக்கழகம், மாணவர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கலாக கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த அறிமுகத்தின் மூலமாக மாணவர்கள் இலங்கையில் இருந்தோ அல்லது இரண்டாம் வருடகற்கை முதற்கொண்டு அமெரிக்காவிற்குச் சென்றோ MBA கற்கை நெறியைத் தொடரமுடியும்.

அமெரிக்காவில் ஒருவருடத்திற்கு மேலான காலப்பகுதியில் கல்வியைத் தொடரும் சந்தர்ப்பத்தில், மாணவர்களுக்கு மிகவும் அவசியமான சர்வதேச அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவுகின்ற விருப்பத்திற்குரிய செய்முறைப் பயிற்சிக் காலத்தின் கீழ் அவர்கள் அமெரிக்காவில் ஒருவருடத்திற்கு தொழில் புரியும் தகைமையையும் பெற்றுக்கொள்கின்றனர்.   

குறிப்பிட்ட 12 துறைகளில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தி மாணவர்கள் தமது MBA தகைமையைப் பெற்றுக்கொள்ள இந்த பங்குடமை இடமளிப்பதுடன், ஒருவருடைய ஆர்வம் மற்றும் இலட்சியங்களின் அடிப்படையில் கலப்பு பாடநெறிகளையும் தெரிவுசெய்ய முடியும்.

கணக்கியல்,நிதி,பொதுமுகாமைத்துவம், விருந்தோம்பல் முகாமைத்துவம், மனிதவளங்கள், தகவல் முறைமை முகாமைத்துவம், சர்வதேசவியாபாரம், சந்தைப்படுத்தல், செயற்திட்ட முகாமைத்துவம், நிலைபேற்றியல் முகாமைத்துவம் அடங்கலாக தொழிற்துறையில் பல்வேறுபட்ட துறைகளை உள்ளடக்கி,சிறப்பானMBA தகைமைஒன்றைப் பெற்றுக்கொள்ளும் வசதியை DeVry பல்கலைக்கழத்தின் Keller முகாமைத்துவ கற்கைநெறி கல்லூரியுடனான பங்குடமையுடன்  Asian International Academy அலதற்போதுவழங்கவுள்ளது.

DeVry பல்கலைக்கழகத்தின் சர்வதேசமட்டமுகாமைத்துவப் பணிப்பாளரானரணில் ஹேரத் அவர்கள் குறிப்பிடுகையில்

“Asian International Academy  போன்ற ஆற்றல் வாய்ந்த கல்வி நிறுவனம் ஒன்றுடன் பங்காளராக இணைவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். வணிகநிர்வாக முதுமாணி கற்கைநெறியான துயதார்த்தமான உலகபயன்பாடுகளுடன் கலப்பு முகாமைத்துவ கோட்பாடுகளுடன், தற்போதைய யுகத்தில் முகாமைத்துவ தொழில்துறையினரிடமிருந்து வர்த்தக நிறுவனங்கள் எதிர்பார்க்கின்ற நடைமுறை ஆற்றல்கள் மற்றும் எண்ணக்கருக்களை வலியுறுத்தும் வகையில் தற்போது இலங்கையிலும் கிடைக்கப் பெறுகின்றது. ஒரு ஒத்திசைகின்ற வணிககல்வியை வழங்க வேண்டும் என்ற இலட்சியத்தை எமது நிறுவனம் கொண்டுள்ளதுடன், இந்த கற்கைநெறியானது மாணவர்கள் முகாமைத்துவ நிபுணத்துவத்தை விருத்திசெய்ய இடமளிப்பதுடன்,வர்த்தகமுகாமைத்துவம் போன்றதுறைகளில் தமது அறிவு, திறமைகள் மற்றும் தொழில்வாய்ப்புக்களைமேம்படுத்தி,வர்த்தகத் தொழிற்துறையில்

தொழிற்பாடுகளைஒருங்கிணைத்து,பல்வேறுதுறைகளின் மத்தியில் தமது முயற்சிகளை முன்னெடுக்க வழிகாட்டுகின்றது. தனது புத்தாக்க மந்திரத்தை உண்மையாகக் கடைப்பிடிக்கும் வகையில் உலகெங்கிலுமிருந்து மாணவர்களைக் கொண்டமெய்நிகர் வகுப்பறையில் இப்பாடநெறியைத் தொடரமுடிகின்றது.

கலந்துரையாடல்களை ஊக்குவிக்கும் வகையிலும், நடைமுறையில் யதார்த்தமான வகுப்புப் பணிகளையும் கொண்டமதிப்பாய்வுமுறைமைஒன்றுகட்டமைக்கப்பட்டுள்ளது. சர்வதேசஅளவில் மாணவர்களுடன்

இடைத் தொடர்புகளை ஏற்படுத்துவது, உள்நாட்டிலும்,சர்வதேச ரீதியாகவும் வலையமைப்புக்களை கட்டியெழுப்ப உதவுகின்றது. உள்நாட்டு உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் கல்விவகுப்புக்களை உள்நாட்டு விரிவுரையாளர்களும் வழங்குவதுடன், அறிவைப் பகிரும் அமர்வுகள் மூலமாகய தார்த்தமான நடைமுறை அணுகுமுறையும் பின்பற்றப்படுகின்றது.

இலங்கை மாணவர்களுக்கு MBA கற்கைநெறியை வழங்கும் DeVry பல்கலைக்கழகம்... Reviewed by Author on October 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.