அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை 200 ஓட்டங்களுக்கு சுருண்டது : மே.தீவுகள் தடுமாற்றம்,,,


மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணி 200 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து ஏமாற்­ற­ம­ளித்­த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்களைப்பெற்று தடுமாறி வருகின்றது.


இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யா­டி­வ­ரு­கி­றது. இத் தொடரின் முதல் போட்டி காலியில் நடை­பெற்­றது. இப்­போட்­டியில் இலங்கை அணி அபார வெற்­றி­யீட்­டி­யது.

இந்­நி­லையில் இத்­தொ­டரின் இரண்­டா­வதும் கடை­சி­யு­மான போட்டி நேற்று பி.சரா ஓவல் மைதா­னத்தில் ஆரம்­ப­மா­னது. சோபர்ஸ் -– திஸரா என்று பெய­ரி­டப்­பட்ட இக்­கிண்­ணத்தின் இரண்­டா­வது போட்­டிக்­கான நாணய சுழற்­சியில் இலங்கை அணி வெற்­றி­பெற்­றது.

இப்­போட்­டிக்­கான நாணய சுழற்­சிக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட நாணயம் விசே­ட­மாக தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்­டக்­காரர் சோபர்ஸ் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் திஸரா ஆகி­யோரின் உருவம் பொறித்த நாணயம் இதற்­காக தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது. அதன்­படி கரு­ணா­ரத்ன மற்றும் சில்வா ஆகியோர் கள­மி­றங்­கினர். இதில் சில்வா ஓட்­ட­மேதும் பெறாத நிலையில் ஆட்­ட­மி­ழந்து வெளி­யே­றினார். அதன்­பி­றகு மெண்டிஸ் கள­மி­றங்­கினார். இவரும் 13 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராக கள­மி­றங்­கிய கரு­ணா­ரத்­னவும் 13 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க ஒரு கட்­டத்தில் 34 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுக்­களை இழந்து தடு­மா­றி­யது இலங்கை அணி.

அதன்­பி­றகு சந்­தி­மா­லுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தி­யூஸும் 14 ஓட்ட­ங்க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க சிறி­வர்­தன கள­மி­றங்­கினார். இந்த ஜோடி அணியின் ஓட்ட எண்­ணிக்கை சற்று உயர்த்­திக்­கெண்டு போக 25 ஓட்­டங்­க­ளுடன் சந்­திமால் ஆட்­ட­மி­ழந்தார். அடுத்து 68 ஓட்­டங்கள் பெற்று ஆடிக்­கொண்­டி­ருந்த சிறி­வர்­தன ஆட்­ட­மி­ழந்தார். ஹேரத் ஆட்டமிழக்காமல் 26 ஓட்­டங்­களைப் பெற்று களத்தில் இருந்தார். இறுதியில் இலங்கை அணி 200 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.

பந்­து­வீச்சில் மிரட்­டிய மேற்­கிந்­தியத் தீவு­களின் வோரிக்கன் 4 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். அதன்­பி­றகு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் 2ஆம் நாளான இன்று மேலும் 2 விக்கெட்டுகளை இழந்து 37 ஓட்டங்களைப்பெற்று மேற்கிந்தியத் தீவுகள் அணி தடுமாறி வருகின்றது.

இலங்கை 200 ஓட்டங்களுக்கு சுருண்டது : மே.தீவுகள் தடுமாற்றம்,,, Reviewed by Author on October 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.