ஐரோப்பாவில் இனி அகதிகளுக்கு இடமில்லை: பிரான்ஸ் பிரதமர் அதிரடி அறிவிப்பு...
ஐரோப்பிய நாடுகளில் குடியேற இனி அகதிகளுக்கு இடமில்லை என பிரான்ஸ் நாட்டு பிரதமரான மேனுவல் வால்ஸ் அறிவித்துள்ளார்.
ஜேர்மனியில் வெளியாகும் Sueddeutsche Zeitung என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரான்ஸ் பிரதமர், ‘அகதிகளுக்கு புகலிடம் கொடுப்பது தொடர்பாக ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அதிக அளவிலான பிரச்சனைகளை ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வருகின்றன.
இனிமேலும் இதனை அனுமதிக்க முடியாது. ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே அவற்றின் தலைவிதியை தீர்மானிக்கும்.
ஜேர்மனி சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் பிரான்ஸ் அதிபரை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் பிரதமரின் இந்த கருத்தை வெளியிட்டுருப்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், அதிக அளவிலான அகதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் ஜேர்மன் அரசை அவர் நேரடியாக விமர்சனம் செய்யவில்லை.
அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பான விவகாரங்களில் ஜேர்மன் சான்சலர் நேர்மையான முடிவுகளை எடுத்து வருவதாக அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் நாடுகளின் பொருளாதார அமைச்சர்கள் ஐரோப்பிய எல்லைகளை கட்டுப்படுத்தவும், அகதிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அளிக்கவும் 10 மில்லியன் யூரோ ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் இனி அகதிகளுக்கு இடமில்லை: பிரான்ஸ் பிரதமர் அதிரடி அறிவிப்பு...
Reviewed by Author
on
November 27, 2015
Rating:
Reviewed by Author
on
November 27, 2015
Rating:


No comments:
Post a Comment