அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர் யார்? மலைக்க வைக்கும் சொத்து பட்டியல்....


சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த ஆண்டை விட கோடீஸ்வரர்களின் எண்ணைக்கை அதிகரித்துள்ளதுடன் அவர்களின் சொத்துக்களும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளதாக ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் நாட்டில் வர்த்தக செய்திகளை வெளியிடும் Bilanz என்ற பத்திரிகை அந்நாட்டில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்துக்கள் பற்றி ஆய்வு எடுத்து வெளியிட்டுள்ளது.

அதில், மரச்சாமான்களை விற்பனை செய்து வரும் IKEA என்ற நிறுவனத்தின் உரிமையாளரான Ingvar Kamprad என்பவரின் குடும்பத்தினரே இந்த கோடீஸ்வரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 45 பில்லியன் பிராங்க் ஆகும். இது கடந்த ஆண்டை விட 2 பில்லியன் பிராங்க் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் மற்றும் பிரேசில் நாடுகளின் குடியுரிமை பெற்ற பங்குச்சந்தை தொழிலதிபரான Jorge Paulo Lemann என்பவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 28 முதல் 29 பில்லியன் பிராங்க் ஆகும். இது கடந்தாண்டை விட 3 பில்லியன் பிராங்க் உயர்ந்துள்ளது.

இந்த சொத்து பட்டியலில் முதல் 10 இடங்களில் வகிப்பவர்களின் ஒட்டுமொத்த சொத்து 180 பில்லியன் சொத்து ஆகும். சராசரியாக, சுவிஸ் நாட்டில் 300 கோடீஸ்வரர்கள் சுமார் 595 பில்லியன் சொத்து மதிப்புடன் வசித்து வருகின்றனர்.

இது கடந்தாண்டை விட 6 பில்லியன் பிராங்க் கூடுதல் ஆகும்.

இந்த 300 கோடீஸ்வரர்கள் ஒவ்வொருவரின் சராசரி சொத்து மதிப்பு 1.98 பில்லியன் பிராங்க் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர் யார்? மலைக்க வைக்கும் சொத்து பட்டியல்.... Reviewed by Author on November 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.