அண்மைய செய்திகள்

  
-

தமிழ் முக்கலைகளில் ஒன்றான நாட்டிய கலை பரதம் முதன்முதலில் ஜோசப்வாஸ் நகரில்.- Photos



பரதநாட்டிய பயிற்சி வகுப்புக்கள் அங்குரார்ப்பன நிகழ்வு.

ஜேம்ஸ் .றீற்றம்மா .சுதாஜினி உதவிக்கரம் விடத்தல்த்தீவு. இதன் முழுமையான அனுசரணையுடன் 04 - 11- 2015 புதன்கிழமை ஜோசப்வாஸ் நகரில் மாலை மூன்று மணியளவில் ,பரதநாட்டிய அங்குரார்ப்பன நிகழ்வுகள் பங்குத்தந்தையும்,இவ் பயிற்சி நெறியின் இயக்குனருமான அருட்பணியாளர் ரொக்ஸ்சன் குரூஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமானது ..
.
இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும் ,பள்ளிமுனை பங்குத்தந்தையுமான அருட்பணி ஸ்டீபன் ராஜா அடிகளார் கலந்துகொண்டு சிறப்பித்தார் .
.
இன்னும் இவ் நிகழ்விற்கு மன்னார் கல்வி வலய அழகியல் பாடத்தின் ஆசிரிய ஆலோசகர் திருமதி மல்லிகா அவர்களும் ,பரத நாட்டிய பயிற்சி ஆசிரியை திருமதி ராஜ்மோகன் .லூட்ஸ் அவர்களும் ,திருமதி ஜேம்ஸ் றீற்றம்மா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

மற்றும் கிராமத்தின் அருட்சகோதரிகள் , ஆலய மேய்ப்பு பணி சபையினர் ,மற்றும் கிராமத்தின் சங்கங்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் ,மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் இவ் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நன்றி .
தகவல் - ஜோ .கியோமர் பயஸ் .
ஜோசப்வாஸ் நகர் ,
தோட்டவெளி.






தமிழ் முக்கலைகளில் ஒன்றான நாட்டிய கலை பரதம் முதன்முதலில் ஜோசப்வாஸ் நகரில்.- Photos Reviewed by NEWMANNAR on November 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.