6 இலங்கை மீனவர்களை காப்பாற்றிய அமெரிக்க கடற்படை
தொழில்நுட்ப கோளாறினால் நடுகடலில் நிர்கதிக்குள்ளாகிய இலங்கை மீனவர்களை அமெரிக்க கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்து சமுத்திரத்தி்ல் நேற்று நிர்கதிக்குள்ளான நிலையில் இலங்கை தேசிய கொடியுடனான படகிலிருந்த 6 மீனவர்களை அமெரிக்க கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
நிலப்பரப்பிலிருந்து 300 கடல் மைல் தூரத்தில் வைத்து மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
நடுக்கடலில் உணவின்றியும், குடி நீரின்றியும் இலங்கை மீனவர்கள் இருந்துள்ளதாக அமெரிக்க கப்பலின் கட்டளைத் தளபதி ஜே.ஜே.குமீன் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் இடையிலான போராட்டத்திலிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், அவர்களின் படகின் எஞ்ஜினை உயிர்பிப்பதற்கு உதவிகளை செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எனினும், கோளாறுக்கு உள்ளான படகை திருத்தியமைக்க முடியாது போன நிலையில், வேறொரு படகொன்றை வழங்கி, அவர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
6 இலங்கை மீனவர்களை காப்பாற்றிய அமெரிக்க கடற்படை
Reviewed by NEWMANNAR
on
November 06, 2015
Rating:

No comments:
Post a Comment