யாழ். மாணவன் செந்தூரனுக்கு நாடாளுமன்றில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. அஞ்சலி
அரசியல் கைதிகள் விடுதலைக்காக தனது உயிரைக் கொடுத்த யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரனின் தியாகத்தை கௌரவிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர், மேலும் தெரிவிக்கையில்,
"அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யுமாறு கோரி உருக்கமான கடிதமொன்றை எழுதிவைத்துவிட்டு யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிர்த் தியாகம் செய்துள்ளார்.
இந்த மாணவனுக்கு இந்த உயரிய சபையில் எனது அஞ்சலியையும், கௌரவத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதேவேளை, இந்த மாணவனின் உயிர்த்தியாகத்திற்கு மதிப்பளித்தாவது அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோருகின்றேன். இதுபோன்ற உயிர்த்தியாகங்கள் இனியும் நடைபெறாதிருக்க அரசு விரைந்து செயற்படவேண்டும்'' - என்றார்.
யாழ். மாணவன் செந்தூரனுக்கு நாடாளுமன்றில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. அஞ்சலி
Reviewed by NEWMANNAR
on
November 27, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 27, 2015
Rating:


No comments:
Post a Comment