மன்னாரிலிருந்து 600 மெகா வோட் வீதம் 25 வருடங்களுக்கு எண்ணெய் பிறப்பாக்கம் செய்ய முடியும் – சந்திம வீரக்கொடி
மன்னாரில் எரிவாயு மற்றும் எரிபொருளுக்கான ஆய்வுகளை பிரான்ஸ் பெற்றோலிய நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளத் தயாராகி வருவதாக பெற்றோலிய அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
நான்கு பெற்றோலியக் கிணறுகளில் அளவிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவற்றில் இரண்டு கிணறுகளில் பெற்றோலிய வளம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மன்னாரிலிருந்து 600 மெகா வோட் வீதம் 25 வருடங்களுக்கு எண்ணெய் பிறப்பாக்கம் செய்ய முடியும் என தாம் நம்புவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 5 அல்லது 6 ஆண்டுகளில் எரிவாயு பயன்பாட்டை ஆரம்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
மன்னார் எரிவாயு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் சந்திம வீரக்கொடி இந்த விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.
மன்னாரிலிருந்து 600 மெகா வோட் வீதம் 25 வருடங்களுக்கு எண்ணெய் பிறப்பாக்கம் செய்ய முடியும் – சந்திம வீரக்கொடி
Reviewed by NEWMANNAR
on
November 27, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 27, 2015
Rating:


No comments:
Post a Comment