அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்-18-12-2015....



சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் மாதம் 03ம் திகதி நினைவு கூறப்படுகின்றது அத்தினத்தினை மன்னார் மாவட்ட செயலகத்தினரும் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வுச்சங்கமும் இணைந்து இன்று காலை 9-30 மணியளவில் கவனயீர்ப்பு பேரணியினை நடத்தினர்...

மன்னார் பாலத்தின் முன்பாக இருந்து ஆரம்பமான பேரணி மன்னார் அரசபேரூந்து தாரிப்பிடத்தில் மாற்றாற்ல் தொடர்பான கருத்தினை தெளிவு படுத்தியதோடு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ. தேசப்பிரிய அவர்களும் மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெல் அவர்களுடன் மன்னார் பிரதேசச்செயலாளர் கே.எஸ்.வசந்த குமார் முகாமைத்துவ அதிகாரி ராதா பெர்ணாண்டோ அவர்களும் பேரூந்துகளில் மாற்றாற்றல் உள்ளோர் சின்னங்களை உள்ளடக்கிய ஸரிக்கர்களை ஒட்டினர் அதனைத்தொடர்ந்து நகரசபை மண்ணடபத்தில் மாற்றாற்றல் உள்ளோருக்கான கலைநிகழ்வுகள இடம்பெற்றன  பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளையும் அவர்களுக்கு நாம மேற்கொள்ள வேண்டிய கடமைகள் சேவைகள் தேவைகள் நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்தினை உறுதி செய்யும் விதமாக பல வேலைப்பாடுகளை முன்னெடுக்கும் தேவை அதிகமாகவுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 2400 மேற்பட்ட முhற்றுத்திறனாளிகள் உள்ளனர் யுத்ததததாலும் விபத்துக்களாலும்  இயற்கை அனர்த்தங்களாலும் பிறப்பினாலும் தான் அவர்கள் இந்நிலைக்கு ஆளாகின்றார்கள் இவர்களும் மனிதர்கள் தான் இவர்களை நாம் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்காமல் எம்மைப்போல் அவர்களையும் ஏற்று நடந்து கொள்ள வேண்டும்….


























மன்னாரில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்-18-12-2015.... Reviewed by Author on December 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.