சொந்த இடத்தில் சுதந்திரமாக வாழ விடுங்கள்-முள்ளிக்குளத்தின் கிராமமக்கள் அரசாங்க அதிபரிடம் மகஐர் கையளிப்பு-18-12-2015...
தேசிய மீனவசங்கத்தின் மன்னார்க்கிளையின் ஏற்பாட்டில் ...முள்ளிக்குளத்து கிராமமக்கள் தங்கள் தொந்த இடமாகிய முள்ளிக்குளத்தில் தங்களுடைய நீர்வளம்- நில வளம் -காட்டுவளம் உடைய சொந்த ஊரை தங்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்து விவசாய நிலங்களையும் கடற்கரையையும் குடியிருப்பு காணிகளையும் மீட்டுத்தருமாறு கோரி அமைதியான முறையில் மன்னார் மீனவ சமாசத்தில் ஒன்று கூடிய மக்கள் தமது தேவையின் தாற்பரியத்தை அவசியத்தை ஊடகங்களுக்கு தெளிவு படுத்தியதோடு ...
முள்ளிக்குளத்தின் மீனவசங்க தலைவர் ரி.றொஸான் அவர்களுடன் ஆலயச்செயலாளர் ஏ.அந்தோனிலெம்பட் மக்களின் பிரதிநிதிகளாக மகஐரை அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
மகஐரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்….
மகஐரின் சாரம்சம்...
மன்னாரின் தெற்கே 300 வருடபழமை வாய்ந்த கிறிஸ்த்தவ கிராமமான முள்ளிக்குளத்தின் எமது கிராமம் நாட்டின் அசாதாரண யுத்த சு10ழ்நிலை காரணமாக இரண்டு மாபெரும் இடப்பெயர்வுகளை சந்தித்துள்ளது 1990ம் ஆண்டும் 350 குடும்பங்களை கொண்டிருந்தது அதன் பின் அரண்டாம் முறையாக 2007-09-15 எந்தவொரு யுத்த சு10ழ்நிலையும் இடம் பெறதாசந்தர்ப்பத்தில் அரச படையினர் எமது கிராமத்தினை ஆக்கிரமித்து எம்மை வெளியேற்றியதுடன் எந்த வித உடைமைகளையும் எடுத்து செல்ல அனுமதியளிக்கவில்லை…
அன்றிலிருந்து இன்று வரை தகரக்கொட்டிலிலும் குடிசைக்கொட்டிலிலும் தான் வாழ்ந்து வருகின்றோம் ஏனையவர்கள் அகதிகளாக இந்தியாவிலும் ஏனைய இடங்களிலும் வாழ்கிறார்கள் …
எமது வளமான கிராமத்தினையும் ஆன்மீகதிருத்தலமான புனித பரலோக அன்னை ஆலயத்தினையும் 500 ஏக்கர் மேலாக இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால் நாம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக 120 ஏக்கர் காணியைத்தான் விட்டிருக்கிறார்கள். அது விவசயம் செய்யும் பிரதேசமாகும் ஏனையவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நாம் காட்டுப்பகுதியில் தான் வசித்து வருகின்றோம்.
நாமும் இந்நாட்டுப்பிரஜைகள் என்ற அடிப்படையில் எமது உரிமைகளை நாம் அனுபவிக்கும் விதமாக இந்த நல்லாட்சியான சூழலில் எமது செந்த மண்ணில் வாழும் எமது கனவினை நினைவாக்கித்தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்….
மகஐரின் பிரதிகள்....
- மீள்குடியேற்ற அமைச்சு
- ஆளுனர் திருகோணமலை
- வடமாகாண முதலமைச்சர்
- மன்னார் அரசாங்க அதிபர்
- மேலதிக அரசாங்க அதிபர்
- மன்னார் ஆயர்
- பிரதேச செயலாளர் முசலி
சொந்த இடத்தில் சுதந்திரமாக வாழ விடுங்கள்-முள்ளிக்குளத்தின் கிராமமக்கள் அரசாங்க அதிபரிடம் மகஐர் கையளிப்பு-18-12-2015...
Reviewed by Author
on
December 18, 2015
Rating:
No comments:
Post a Comment