அண்மைய செய்திகள்

recent
-

ஓஹியோ பல்கலைக்கழகத்தின் அறை எண் 428-ல் அதிகரித்த பேய்களின் நடமாட்டம்...


அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள ஓஹியோ பல்கலைக்கழகத்தில் உள்ள வில்சன் ஹால் என்ற பகுதி பேய்களின் நடமாட்டம் இருந்ததால் அந்த அறை தடை செய்யப்பட்டுள்ளது.
1804ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள வில்சன் ஹாலில், 1970களில் ஒருவர் மிகவும் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

அந்த நபர் வில்சன் ஹாலில் உள்ள அறை எண் 428-ல் இறந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அங்கு தங்கியிருந்த மாணவர்கள் வித்தியாசமான ஒலிகள் இரவில் ஒலிப்பதாகவும், யாரோ நடக்கும் காலடி ஓசை கேட்பதாகவும் மேலும் அந்த அறையில் இருந்த பொருட்கள் தானாக நகர்வதாகவும் உணர்ந்துள்ளனர்.

இவ்வாறு அந்த அறைக்கு புதிதாக வந்த மாணவர்கள் தொடர் புகார்கள் அளித்து வந்ததால் அந்த அறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இழுத்து மூடப்பட்டது.

இதையடுத்து அந்த அறை எந்த புது மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை.

இந்த வினோத நிகழ்வுகளுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. ஓஹியோ பல்கலைக்கழகத்தின் வில்சன் ஹால் அமைந்துள்ள பகுதியை சுற்றி பெண்டாகிராம் வடிவில் 5 கல்லறைகள் அமைந்திருந்ததாகவும் அதன் தாக்கமே அந்த அறையில் இவ்வாறு நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் சிலர் வேறு காரணத்தை தெரிக்கின்றனர். அந்த அறை எண் 428-ல் ஒரு இளம்பெண் வசித்து வந்ததாகவும், அந்த பெண் இறந்தவர்களின் ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்ததாகவும் இதனால், அந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் சிலர் கூறுகையில், வில்சன் ஹால், அமெரிக்காவின் பூர்வக் குடிகளின் கல்லறைகள் மீது கட்டப்பட்டுள்ளதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 1980ம் ஆண்டு அந்த இடத்தின் அமைப்பு பற்றி மற்றொரு விடயம் தெரியவந்துள்ளது.

அதாவது வில்சன் ஹால் கட்டப்பட்டுள்ள இடத்தின் அடியில், அதற்கு முன்பு ஏத்தன்ஸ் மனநோய் மருத்துவமனையின் கல்லறை அமைந்திருந்தது தெரியவந்துள்ளது.

அந்த அறையில் ஏற்படும் வினோத நிகழ்வுகளுக்கு அதிகார்வப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை யாராலும் வழங்க முடியாத நிலையில் அந்த அறை யாருக்கும் வழங்கப்படாமல் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.



ஓஹியோ பல்கலைக்கழகத்தின் அறை எண் 428-ல் அதிகரித்த பேய்களின் நடமாட்டம்... Reviewed by Author on December 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.