அண்மைய செய்திகள்

recent
-

ஜி.சீ.ஈ. (சா/த) பரீட்சை நிலையங்களை முற்றுகையிட அதிரடிப்படை நியமனம்! - 600 அதிகாரிகள் களத்தில் குதிப்பு...



தற்சமயம் ஜி.சீ.ஈ. (சாதாரணதரப்) பரீட்சை நடந்துக் கொண்டிருக்கும் பரீட்சை நிலையங்களில் அதிரடிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு 600 ற்கு மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்ட அதிரடிப்படையொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம், வலயக்கல்விக் காரியாலயங்கள் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த அதிரடிப்படையில் பங்கேற்கவுள்ளதாகவும், வினாப்பத்திரங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இணைப்பு மத்திய நிலையங்களில் 24 மணித்தியாலங்களும்,

பரீட்சை நடக்கும் போது பரீட்சை மண்டபங்களிலும் திடீர் சோதனைகளை நடத்த இவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன் பரீட்சை நிலையங்களில் நடக்கக் கூடிய ஆள் மாறாட்டங்கள் உட்பட பல்வேறு மோசடிகளையும் தவிர்ப்பதற்காக பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்பு பரீட்சை மேற்பார்வையாளர்கள் பரீட்சார்த்திகளுக்கு உரையொன்றை நிகழ்த்த வேண்டும் எனவும்,

அந்த உரையில் பரீட்சை மோசடிகளில் ஈடுபடுபவர்கள் எதிர்காலத்தில் பரீட்சைகளில் தோற்ற அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், அத்துடன் அவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜி.சீ.ஈ. (சா/த) பரீட்சை நிலையங்களை முற்றுகையிட அதிரடிப்படை நியமனம்! - 600 அதிகாரிகள் களத்தில் குதிப்பு... Reviewed by Author on December 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.