இந்தியா-இலங்கை இடையே கடல் பாலம்...
தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் போக்குவரத்து வழித்தடங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா- இலங்கை இடையே கடல் பாலம், சுரங்கப்பாதை ஆகியவற்றை அமைக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பாக நேற்று மக்களவையில் அவர் அளித்த அறிக்கையில்,
இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு ரூ. 24,000 கோடி (இந்திய ரூபாய்) மதிப்பில் கடல் பாலம், சுரங்கப்பாதை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியா வந்தபோது, அவருடன் இந்தத் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விவாதித்தார்.
இந்தத் திட்டத்துக்கான நிதியை அளிப்பதற்கு "ஆசிய வளர்ச்சி வங்கி´ தயாராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளிடையே தடையற்ற போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இந்தியா-இலங்கை இடையே கடல் பாலம்...
Reviewed by Author
on
December 17, 2015
Rating:

No comments:
Post a Comment