தமிழ் மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டும், அது நடைமுறையில் இல்லை: நலிந்த ஜயதிஸ்ஸ...
தமிழ் மொழியானது தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டும் அது இன்னும் நாட்டில் நடைமுறையில் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பல்லின சமூகங்களை கொண்ட இந்த நாட்டில் தமிழ் மொழியும், சிங்கள மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டும், தமிழ் மொழிக்கான அங்கீகாரம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளதென அவர் தெரிவித்தார்.
அத்துடன், இன்றும் அநேக அமைச்சுக்கள் தமது அலுவலக கடிதங்களை சிங்கள மொழியில் மாத்திரமே அனுப்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அனுபவம் தனக்கு மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணிபுரிந்த போது ஏற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
மேலும், அரச துறைகளில் பணிபுரிகின்றவர்கள் அனைவரும் மும்மொழியில் தேர்ச்சியடைந்தவர்களாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அது மாத்திரமன்றி தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அனைத்து துறைகளிலும் மொழிப்பெயர்ப்பாளர்களின் அவசியத்தை தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனின் கவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கொண்டு வந்தார்.
அத்துடன், நலிந்த ஜயதிஸ்ஸ கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஊழல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்ததுடன், அது குறித்த ஆவணங்களை நிதி குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதன்போது கடந்த அரசாங்கமானது சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்றிற்காக பல மில்லியன் ரூபா செலவிட்டமையை ஆதாரங்களுடன் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டிய நிலையில், பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
தமிழ் மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டும், அது நடைமுறையில் இல்லை: நலிந்த ஜயதிஸ்ஸ...
Reviewed by Author
on
December 18, 2015
Rating:

No comments:
Post a Comment