அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கலையருவியின் ஏற்பாட்டில் மாபெரும் கரோல் பாடல் போட்டியும் விருது விழாவும்-

மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையமான 'கலையருவி' அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்டப் பங்குகளுக்கிடையில் நடாத்தப்பட்ட புனித செசிலியா விருதுக்கான மாபெரும் கரோல் பாடல் போட்டியின் இறுதிப் போட்டியும் விருது விழாவும் நாளை சனிக்கிழமை    மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

 கலையருவி அமைப்பின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. ஏ. விக்ரர் சோசை அடிகளார் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

 சிறப்பு விருந்தினர்களாக முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு. எஸ். மாக்கள், டிலாசால் ஆங்கில மொழிப் பாடசாலை அதிபர் அருட்சகோதரர் கே. எஸ். யோகநாதன், லூயி முன்பள்ளி அதிபர் அருட்சகோதரி றீற்றா குணநாயகம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

  கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை புனித செபஸ்தியார் பேராலய வளாகத்தில் நான்கு பிரிவுகளாக நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் பல்வேறு பங்குகளைச் சார்ந்த 38 பாடகர் குழுக்கள் பங்கேற்றிருந்தன.

 ஒவ்வொரு பிரிவிலிருந்தும் நான்கு குழுக்கள்வீதம் 16 குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டு இறுதிப் போட்டியில் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் குழுக்களுக்கு புனித செசிலியா விருது வழங்கப்படும்.

மன்னார் மாவட்டத்தில் வருடாந்தம் நடைபெறும் பிரமாண்டமான கரோல் பாடல் போட்டியாக இப்போட்டி அமைந்திருக்கின்றமை    குறிப்பிடத்தக்கது.




(மன்னார் நிருபர்)
(18-12-2015)

மன்னார் கலையருவியின் ஏற்பாட்டில் மாபெரும் கரோல் பாடல் போட்டியும் விருது விழாவும்- Reviewed by NEWMANNAR on December 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.