மன்னார் சிவபூமி பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானத்தில் மாணிக்கவாசகர் குருபூசையும் திருவாசகம்முற்றோதல் நிகழ்வும்-2016
மன்னார் சிவபூமி பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானத்தில் மாணிக்கவாசகர் குருபூசையும் திருவாசகம்முற்றோதல் நிகழ்வும்
01) மாணிக்கவாசகர் பெருமானுக்கும் நடராஜருக்கும் பூஜைகள் நடைபெறுகின்றன.
02) பூசைகள் முடிந்த பின் மாணிக்கவாசகர் பெருமான் உள்வீதி வலம் வரும் காட்சி
03) வெளிவட்ட வீதியில் உள்ள ஆதிவைரவர் தேவஸ்தானத்திற்கு மாணிக்கவாசகப்பெருமான் நாதஸ்வர மேள தாளங்களுடன் அடியார்களால் தூக்கிச் செல்லப்படுகிறார்.
04) ஆதி வைரவர் ஆலயத்தில் திருவாசகம் முற்றோதல் நடைபெறுகிறது.
05) திருவாசகதேன் என்னும் பொருள் பற்றி தேசபந்து பிரம்மஸ்ரீ மனோ ஐங்கரசர்மா அவர்கள் உரையாற்றுகின்றார்கள்.
06) வவுனியா இந்துமாமன்ற தலைவர் இறைபணிச் செம்மல் வை.செ.தேவராசா அவர்களை பிரம்மஸ்ரீ மனோ ஐங்கரசர்மா அவர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கிறார்கள்.
07) இந்து ஆலயங்கள் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன் அவர்கள் வவுனியா இந்துமாமன்ற தலைவர் இறைபணிச் செம்மல் வை.செ.தேவராசா அவர்களின் ஆயிரத்தி ஐநூறாவது திருவாசக முற்றோதல் நிகழ்வை பாராட்டி இதுவரை உலகிலேயே இதுவரை யாரும் இத்தனை முறை திருவாசகம் முற்றோதல் செய்யவில்லை என்றும் அன்னாரின் சேவையை பாராட்டி பேசுகிறார்.
08) இச்சாதனையை பாராட்டி இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் தேசபந்து அகில இலங்கை சமாதான நீதவான் பிரம்மஸ்ரீ மனோ ஐங்கரசர்மா குருக்கள் அவர்களும் ää மன்னார் மாவட்ட இந்து ஆலயங்கள் ஒன்றியத்தின் தலைவருமான வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன் அவர்களும் திருவாசக கலாநிதி என்ற பட்டத்தினையும் விருதையும் வவுனியா இந்து மாமன்ற தலைவர் இறைபணிச் செம்மல் வை.செ.தேவராசா அவர்களுக்கு வழங்குகிறார்கள்.
மன்னார் சிவபூமி பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானத்தில் மாணிக்கவாசகர் குருபூசையும் திருவாசகம்முற்றோதல் நிகழ்வும்-2016
Reviewed by Author
on
January 16, 2016
Rating:
No comments:
Post a Comment