அண்மைய செய்திகள்

recent
-

மூன்­றரை வரு­டங்­க­ளாக மம்மி நிலையில் பேணப்­பட்ட சீனத் துற­வியின் உடல் ....


மம்மி நிலையில் பேணப்­பட்ட சீனத் துற­வி­யொ­ரு­வ­ரது உடல் மத வைப­வ­மொன்­றை­யொட்டி பொது­மக்­க­ளுக்கு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மூன்­றரை வரு­டத்­துக்கு முன்னர் உயி­ரி­ழந்த துற­வி­யான பு ஹோயுவின் உடல் உருளை வடி­வான கொள்­க­லனில் இது­வரை காலமும் பாது­காக்­கப்­பட்டு வந்­தது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தென் கிழக்கு சீனா வின் புஜியான் மாகா­ணத்தில் குவான்­ஸொயு எனும் இடத்­தி­லுள்ள ஆல­யத்தில் மேற்­படி துற­வியின் உடல் பொது­மக்கள் பார்­வை­யி­டு­வ­தற்­காக காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இது தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

துற­வியின் உடல் வைக்­கப்­பட்­டி­ருந்த கொள்­கலன் ஞாயிற்­றுக்­கி­ழமை திறக்­கப்­பட்ட போது அதனுள் அவ­ரது உடல் நன்கு பேணப்­பட்ட நிலையில் காணப்­பட்­டது.

அந்த உடலை பேணு­வ­தற்­காக அதனை மூடி­யி­ருந்த கரியும் சந்­தணமும் நிபு­ணர்­களால் கவ­ன­மாக அகற்றப்பட்டது.

இதன்போது அங்கு கூடியிருந்த பெருந்தொகை யான மதகுருமார் அந்த துறவிக்கு மரியாதை செலுத்தினர்.

'புனித சதை' என அழைக்கப்படும் மேற்படி துற வியின் உடலானது அந்நாட்டு பாரம்பரிய வழக்கப் பிரகாரம் தங்க உள்ளடக்கங்களால் மூடப்பட்டு பௌத்த சிலையொன்றாக மாற்றப்படவுள்ளது.

புஜியான் மாகாணத்திலுள்ள ஜின்சியாங் நகரில் 1919 ஆம் ஆண்டில் பிறந்த பு ஹோயு, தனது 13 ஆவது வயதில் துறவியானார்


மூன்­றரை வரு­டங்­க­ளாக மம்மி நிலையில் பேணப்­பட்ட சீனத் துற­வியின் உடல் .... Reviewed by Author on January 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.