முதன்முறையாக விண்வெளியில் நடக்கும் பிரித்தானிய வீரர்: விண்வெளியிலிருந்து நேரடி காட்சிகள்...
பிரித்தானிய நாட்டை சேர்ந்த விண்வெளி வீரரான டிம் பீக் என்ற ஆராய்ச்சியாளர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெளியேறி முதன் முதலாக விண்வெளியில் நடந்த நேரடிக்காட்சிகள் வெளியாகியுள்ளன.
விண்வெளியை ஆய்வு செய்து வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பல மாதங்களாக தங்கி அமெரிக்கா, பிரித்தானியா நாடுகள் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆய்வு மையத்திற்கு வெளியே உள்ள ஆய்வு சாதனம் பழுதானதை தொடர்ந்து அதனை சீர்படுத்தும் முயற்சி பிரித்தானியாவை சேர்ந்த டிம் பீக் ஈடுப்பட்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாக, ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளியேறி முதன் முதலாக விண்வெளியில் நடந்த சென்றுள்ளார்.
இதன் நேரடிக்காட்சிகள் தான் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சாதனையின் மூலம், பிரித்தானிய இளைய சமுதாயத்தினர் அறிவியல் தொடர்பாக கல்வி கற்பதற்கு டிம் பீக்கின் முயற்சி ஒரு பாடமாக அமையும் என பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
முதன்முறையாக விண்வெளியில் நடக்கும் பிரித்தானிய வீரர்: விண்வெளியிலிருந்து நேரடி காட்சிகள்...
Reviewed by Author
on
January 16, 2016
Rating:

No comments:
Post a Comment