புகலிடம் கோரி வந்த அகதிக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’ பரிசு: கோடீஸ்வரராக மாறிய அதிசயம்...
பிரான்ஸ் நாட்டில் புகலிடம் கோரி வந்த அகதி ஒருவருக்கு கிடைத்த மெகா ‘ஜாக்பாட்’ பரிசை தொடர்ந்து சொந்தமாக அடுக்குமாடி வீடு வாங்கி இன்று கோடீஸ்வரராக வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
சிரியா நாட்டை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத 30 வயதான நபர் ஒருவர் உள்நாட்டு யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு அவர் சொந்தமாக நடத்தி சிறிய தொழிலும் முடங்கியது.
தொழிலை கைவிட்ட அந்த நபர் கூலி வேலைக்கு சென்ற தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். ஆனால், அவரது வருமானம் குடும்பத்தை நடத்த இயலாமல் இருந்துள்ளது.
மேலும், உள்நாட்டு யுத்தமும் தீவிரமடைந்ததால் சிரியாவை விட்டு தனியாக வெளியேறி கடந்த மார்ச்(2015) மாதத்தில் பிரான்ஸில் புகலிடம் கோரி சென்றுள்ளார்.
மேற்கு பாரீஸ் நகருக்கு அருகில் உள்ள Bagnolet என்ற நகரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், தேசிய அரசின் கீழ் இயங்கும் Federation Francaise என்ற லொட்டரி நிறுவனத்திடம் 10 யூரோவிற்கு லொட்டரி ஒன்றை கடந்த மே மாதம் வாங்கியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக இந்த ஜாக்பாட் பரிசை வென்ற 215 நபர்களின் பட்டியலில் சிரிய நாட்டு அகதியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அதாவது, 10 யூரோவை கொடுத்து ஒரு மில்லியன் யூரோ ஜாக்பாட் பரிசு தொகையை அவர் வென்றுள்ளார்.
இந்த பரிசு தொகை கடந்த யூன் மாதமே அவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும், இது தொடர்பான உறுதியான செய்திகள் சில தினங்களுக்கு முன்னர் தான் அதிகாரப்பூர்வமாக வெளியாகியது.
ஒரு மில்லியன் யூரோவை வைத்து அவர் தற்போது அதே நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சொந்தமாக விலைக்கு வாங்கியுள்ளார். சிரியாவில் உள்ள தனது குடும்பத்தினரையும் பிரான்ஸ் நாட்டிற்கு வரவழைக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறார்.
இது மட்டுமில்லாமல், இதே பகுதியில் சொந்தமாக ஒரு உணவகம் ஒன்றை திறக்க உள்ளதாகவும், பிரெஞ்ச் மொழியை நன்றாக கற்றுக்கொண்டு பிரான்ஸ் நாட்டிலேயே தனது வாழ்க்கையை குடும்பத்துடன் சிறப்பாக நடத்தி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
புகலிடம் கோரி வந்த அகதிக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’ பரிசு: கோடீஸ்வரராக மாறிய அதிசயம்...
Reviewed by Author
on
January 16, 2016
Rating:

No comments:
Post a Comment